நாளிதழ்களில் இன்று: திருமணத்திற்கு மறுத்ததால் சிறுமியை எரித்த உறவினர்

  • 17 பிப்ரவரி 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா- 'திருமணத்தை மறுத்த சிறுமிக்கு நேர்ந்த அவலம்'

திருமணம் செய்து கொள்ள மறுத்த 14 வயது சிறுமியை தீயிட்டு கொளுத்திய உறவினரை போலீஸார் தேடி வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

படத்தின் காப்புரிமை iStock

மதுரை திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிராமத்தில் பள்ளியில் படித்து வரும் பாதிக்கப்பட்ட சிறுமி, பலத்த தீக்காயங்களுடன் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் - மணல் குவாரிகளை மூட உத்தரவு

படத்தின் காப்புரிமை SEYLLOU

திருச்சி மாவட்டத்தில் திருவாசி, கிளியனல்லூர், அலம்பாடி, மணமேடு ஆகிய பகுதிகளில், காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில், இதனை சம்மந்தப்பட்ட இயக்குநர் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.

தி இந்து தமிழில் வெளியான கார்டூன்

படத்தின் காப்புரிமை தி இந்து தமிழ்

தினமணி - 'காவிரி தீர்ப்பு'

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி நீரை அடுத்த 15 ஆண்டுகளுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முதல் பக்க பிரதான செய்தியாக தினமணி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: