2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை எதிர்பார்க்கலாமா?

நரேந்திர மோதி கேட்டுக்கொண்டதால்தான் அதிமுக அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொண்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி

அணிகள் இணைந்து ஓராண்டு காலத்துக்கு மேலாகியும் அவர் இவ்வாறு பேசுவது எதனால் என்று #வாதம்விவாதம் பகுதியில் பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளை வழங்குகிறோம்.

"எந்த நிர்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அரசியல் தொலைநோக்கு பார்வையில் மோடி சொல்லியிருக்கலாம். கூட்டணி கணக்கிற்காகத்தான் அதிமுகவை பயன்படுத்த நினைக்கிறது பாஜக. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதை சரிகட்ட அதிமுகவின் ஆதரவு தேர்தலுக்கு பின் அவசியமாகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக-அதிமுக கூட்டணியை எதிர்ப்பார்க்கலாம்," என்கிறார் துரை முத்துச்செல்வம்.

தினகரன் மணி எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார்," இதன் பிறகும் ஆளுநர் இந்த ஆட்சியை கலைக்காமல் மவுனம் காப்பது அழகல்ல."

பணத்தாசை, பேராசை, பதவி ஆசை இவை அனைத்தும் இவரை இப்படி பேச வைக்கிறது என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் சரவண குமார்.

இன்னும் பல உண்மைகள் போக போக தெரியும்....மத்திய அரசின் தொடர் அழுத்தத்தை தாங்க முடியாமல்தான் உண்மைகளை பன்னீர் கூறுகிறார் என்கிறார் அஜித் எனும் பிபிசி நேயர்.

"தமிழகத்தில் பிஜேபி பின் வாசல் வழியாக வர திட்டம் போடுதுனு மற்ற கட்சிகாரங்க சொன்னதை,சுற்றிவளைத்து வேறு விதமான வார்த்தைகள் மூலம் ஒத்துகிட்டமாதிரி இருக்கு.மெல்ல மெல்ல கூட்டணி அறிவிப்பு கூட வரலாம் போலயே!" என்கிறார் சாந்தகுமார் எனும் ட்விட்டர் நேயர்.

"ஓபிஎஸ் சொல்வது ஓரளவுக்கு உண்மைதான். சாதி பார்த்து ஒட்டு போட்டால், தமிழகம் படு குழியில் விழுந்து விடும். ஊழல் குடும்பம் என்று தெரிந்தே ஒட்டு போட்டால் மக்கள் பாழும் கிணற்றில் விழுவதற்கு சமம்," என்று கூறியுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

"அரசியல்ல நிலைக்க ஆளுங்கட்சிய எதிர்க்க ஆரம்பிச்சுட்டார். தர்மயுத்தம் போது இருந்த மக்கள் ஆதரவு, இப்போ இல்லவே இல்ல. 100% உள்நோக்கம்தான்," என்று பதிவிட்டுள்ளார் சதீஷ் குமார் எனும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: