டிஜிட்டல் கல்வியில் கலக்கும் அரசு பள்ளிகள். ஆனால், அது போதுமா?
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப்பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு கையடக்க கணினி மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது.
டிஜிட்டல் வழியில் கல்வி கற்க ஆங்கில மொழி அறிவும் முக்கியம் என்ற அடிப்படையில் ஆங்கில பேச்சுமொழி பயிற்சியும் வழங்கப்படுவதாக, அத்தகைய பள்ளிகளில் ஒன்றான சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பானுமதி தெரிவித்தார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரான பிரின்ஸ் கஜேந்திர பாபு, "இது வரவேற்கத்தக்க முயற்சி. ஆனால் பெரும்பாலும் அடிப்படை வசதிகளே இல்லாத அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என்று நினைப்பது சாத்தியமற்ற ஒன்று" என்று கூறினார்.
மேலும், இதுகுறித்து பேசிய அவர், உலகமெங்கும் உள்ள பல்வேறு நாடுகள் தாய்மொழி கல்வியையும், பொதுப்பள்ளிகள் முறையையும் ஏற்றுக்கொண்டு, செயற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்த பேச்சை அரசாங்கம் எப்போது தொடங்கப்போகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
"திறன்மிக்க ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் கொண்ட பள்ளி கட்டடம் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டவை இல்லாத பள்ளியில் கையடக்க கணினியில் செயலியை கொண்டு பாடம் நடத்தினால் பலனளிக்காது" என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- "ஓராண்டு எடப்பாடி ஆட்சி - எம்.எல்.ஏக்களுக்கு கூவத்தூர்; மக்களுக்கு நரகம்"
- இஸ்ரேல் - காசா எல்லைப்பகுதியில் குண்டுவெடிப்பு: 4 இஸ்ரேலிய வீரர்கள் படுகாயம்
- திருமண உறவாக மலர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணின் லிவ்-இன் உறவு #HerChoice
- 300 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட பாலியல் கையேடு
- உ.பி: என்கவுண்டர்களின் இலக்கு முஸ்லிம்களும் தலித்துகளுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :