"அரசியல் தொடர்பில்லாமல் ஊழல் நிகழுமா?"

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,300 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

இந்த மிகப்பெரிய முறைகேட்டுக்கு 'வங்கியின் கண்காணிப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமா? குற்றம்சாட்டப்பட்டவர்களின் அரசியல் தொடர்பு காரணமா?' என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

"அரசியல் தொடர்பில்லாமல் இங்கு எப்படி ஊழல் செய்ய இயலும்? எவ்வளவு பெரிய சட்டவிரோத செயல்களுக்கும் கிடைக்கும் தண்டனை யிலிருந்து தப்புவிக்கும் சக்திகள் இங்கே இயங்கும் போது இதெல்லாம் மிக சாதாரணம் ஐயா. பொது நிதியை தவறாக கையாள்கிறவர்கள் சிறிதும் குற்ற உணர்ச்சி யின்றி சமூகத்தில் வலம் வருகிறார்கள். நாமும் தோல் தடித்த குழந்தைகளையே சமூகத்திற்கு தருகிறோம். பின்னர் அங்கிருந்து உற்பத்தி ஆகும் அரசியல்வாதியிடமிருந்தோ, தொழில் வல்லுனரிடமிருந்தோ நேர்மையை எதிர் பார்க்க முடியுமா," என்று கேள்வி எழுப்புகிறார் பெஸ்ட்விக் பிரவீன் சில்வெஸ்டர்.

"எந்த ஒரு வியாபாரமும் கள்ளத்தனமாக செய்யாமல் இந்த அளவுக்கு வளரமுடியாது. இதெல்லாம் ஆரம்பத்தில் சம்பந்தப்பட்டவங்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும். இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு முழுக்க முழுக்க அரசியல் பின்புலம் மட்டுமே காரணம்," என்கிறார் ஜீன் தம்பி எனும் பெயரில் பதிவிடும் நேயர்.

மோதிக்கு தான் வெளிச்சம் என்கிறார் சக்தி வைஷ்ணவி எனும் நேயர்.

"மோசமான நிர்வாகமே அனைத்துக்கும் காரணம். ஒரே ஆவணத்தை ஒரு வங்கி ஏற்றுக்கொள்கிறது. இன்னொரு வங்கி மறுக்கிறது. முறையான பரிசோதனை இல்லாமல் பணம் வழங்கப்படுகிறது," என்கிறார் வீரமணி தங்கவேல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :