நாளிதழ்களில் இன்று: ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி - ஆந்திர ஏரியில் தமிழர்களின் சடலம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராமர் கோயில் ஏரியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அச்செய்தி விவரிக்கிறது.

செம்மரம் வெட்ட வந்த இடத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க ஏரியில் குதித்த போது அதில் மூழ்கி உயிரிழந்தனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி: வங்கி விவகாரம் - பிரதமர் மவுனம் கலைக்க வேண்டும்

படத்தின் காப்புரிமை Getty Images

வங்கி மோசடி விவகாரத்தில் பிரதமர் மோதியும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் தங்களது மௌனத்தை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, வங்கியில் நடந்த 22 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு பிரதமர் மோதியும் நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளதாக மேலும் அந்த செய்தி விவரிக்கிறது.

தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள கார்டூன்

படத்தின் காப்புரிமை DINAMALAR

தி இந்து (ஆங்கிலம்) காவிரி மேலான்மை வாரியம் அமைப்பதே தீர்வு

காவிரி மேலான்மை வாரியம் அமைப்பது மட்டுமே உரிய நேரத்தில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யும் என விவசாயிகள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி (ஆங்கிலம்) வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை STR

தமிழ்நாட்டை விட நல்ல வருடாந்திர மழைப்பொழிவை கர்நாடகா பெறுகிறது என்றும் ஆனால், வடகிழக்கு பருவமழைக்காக தமிழகம் அக்டோபர் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அச்செய்தி விவரிக்கிறது.

இந்நிலையில், தென்மேற்கு பருவ மழையில்தான் நல்ல முறையில் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட முடியும் என்றும் வடகிழக்கு பருவமழை என்பது கூடுதலான ஒன்றுதான் என்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாகவும் மேலும் இந்த செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: