சட்டமும் சமூகமும் சேர்ந்துதான் குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமா?

சென்னையில் ஆறு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

child sexual abuse

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், குழந்தைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு 'சட்டத்தின் போதாமை காரணமா? சமூகத்தின் அற மதிப்பீட்டிலுள்ள குறைபாடுகள் காரணமா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

'யாரையும் மதித்து வாழ்' எனும் பெயரில் பேஸ்புக்கில் இயங்கும் நேயர், "இரண்டும் காரணம். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். நீதி விரைந்து கிடைக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோருக்கு 'குட் டச், பேட் டச்' போன்ற விஷயங்களில் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

"தேவையான சட்டங்கள் உள்ளது. புதியது இப்போதைக்கு தேவையில்லை. சமூகத்தின் அறமதீப்பிட்டில் உள்ள குறைபாடே குற்றங்களுக்கு காரணம். மக்களின் அக நலன்களை பேண மாநில அரசு தவறியிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, உளவியல் பிரச்சனைகள், மலிவு விலை கைபேசி மற்றும் இணையம், ஆபாச வலைதளங்கள், ஆணாதிக்கம் இவை தான் பெரும்பலான குற்றங்களுக்கு காரணமாகின்றன," என்கிறார் துரை முத்துச்செல்வம்.

"சட்டத்தில் கடுமையான தண்டனைகள் இருந்தும் நிறைவேற்ற முடியாமல் போனதால் தான் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன," என்கிறார் புலிவலம் பாஷா.

சட்டம் ஒழுங்காக கடமைகளை செய்தால் இப்படியான செயல்களை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார் முரளி தேவி எனும் பிபிசி நேயர்.

முன்பிருந்த காலம்போல் தற்போது பெண்கள் இல்லை. தங்களின் அடிப்படை உரிமையுமையும் பாலியல் அச்சுறுத்தலுக்கான அறிகுறிகளையும் நன்கு உணர்ந்துள்ளனர். அதையும் தாண்டி தஷ்வந்த போன்ற குற்றவாளிகள் வலம் வருகின்றனர் என்று கூறியுள்ளார் அஜித்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :