"மக்களுக்கு நல்லது செய்வதுதான் எனக்கும் கமலுக்குமான ஒரே நோக்கம்"

  • 23 பிப்ரவரி 2018
ரஜினி படத்தின் காப்புரிமை Getty Images

தானும் கமலும் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும், தங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அவர் குறிப்பிட்ட முக்கிய விடயங்களில் சில:

  • காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டம் வரவேற்கத்தக்கது என்று ரஜினிகாந்த் கூறினார்.
  • மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் நடத்திய முதல் பொதுக்கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கமல் மிகவும் திறமைசாலி என்று குறிப்பிட்ட ரஜினி, அவரின் பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக இருந்ததாக கூறினார்.
  • நகர, ஒன்றிய நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், நிர்வாகிகள் தேர்வு முடிந்த பின்னரே மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியும் என்றார்.
  • 32 மாவட்ட நிர்வாகிகளை ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டும் என்று நினைத்ததாக குறிப்பிட்ட ரஜினி, நேரம் வரும்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
  • கமலின் அரசியல் பாதை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "நாங்கள் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும், எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதுதான்" என்று கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்