முதல் இந்திய பெண் போர் விமானி: சாதனை படைத்த அவனி சதுர்வேதி

படத்தின் காப்புரிமை Getty Images

24 வயதாகும் அவனி சதுர்வேதி முதல் இந்திய பெண் போர் விமானி என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் அவர் `மிக்- 21 பைசன்`(Mig-21 Bison)என்ற போர் விமானத்தை தனியாகி ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

இது பெண்களுக்கான தடைகளை உடைத்து சாதனை படைப்பது போன்றது என்று பிபிசியிடம் தெரிவித்தார் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் அனுபம் பேனர்ஜி.

நாட்டின் ஆயுதப் படை வரலாற்றில் இது "மிக முக்கியமான நாள்" என்றும் அவர் கூறுகிறார்.

இந்திய விமானப்படையில் சமீபமாக சேர்ந்த மூன்று பெண்களில் சதுர்வேதியும் ஒருவர்.

விமானத்தை செலுத்திய பிறகு அதன் அருகில் அவனி இருப்பது போன்ற புகைப்படத்தை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார் ஆனால் விமானப்படை இந்த செய்தியை வியாழனன்று வெளியிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவனி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங்க் ஆகியோருடன் சேர்ந்து பட்டம் பெற்றர். பயிற்சியின் ஒரு அங்கமாக அவர்கள் இருவரும் இதே விமானத்தை செலுத்தவுள்ளனர்.

"விமானப்படையில் ஆண் பெண் இருபாலரும் சம வாய்ப்பை பெற வேண்டும் என விமானப்படை தீவிரமாக முயற்சித்து வருகிறது."

இந்த முயற்சி அதை நோக்கிய பயணம் என அனுபம் பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டிற்கு முன் இந்திய ஆயுத படையில் 2.5சதவீத பெண்கள் இருந்தனர் அதுவும் குறிப்பாக போரிடாத பிரிவுகளில்.

சதுர்வேதிக்கு ச்ச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"மீண்டும் ஒரு தடை உடைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மகளால் மீண்டும் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் அவனி" என அவர் டிவீட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் விமானப் படையில் 20 பெண் போர் விமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்