ரஜினிகாந்தின் அடுத்த படம் அறிவிப்பு

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ரஜினிகாந்தின் அடுத்த படம் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கிய ‘காலா‘ படத்திலும் ஷங்கர் இயக்கத்தில் ‘2.0‘ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

முன்னதாக, ‘2.0‘ படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் முடிவடையாததால், ‘2.0‘ வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ‘காலா‘ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கவிருப்பதாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், இது தொடர்பான பணிகளில் தீவிரமாக இருக்கிறார்.

அரசியல் கட்சி துவங்கவிருக்கும் நிலையில், அவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

இந்நிலையில்தான் அவரது புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அஜீத் நடித்த மங்காத்தா படத்தை துரை தயாநிதி தயாரிக்க, அதனை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.

அதற்குப் பிறகு நீண்ட நாட்களாக படத் தயாரிப்பிலிருந்து விலகியிருந்த அந்த நிறுவனம் தற்போது விஜய்யின் 62-ஆவது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தயாரித்துவருகிறது.

தற்போது ரஜினியின் படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :