“வெங்காயத்தைகூட ஜிஎஸ்டி கட்டி வாங்க வேண்டிய நிலைதான் வரும்”

கடந்த ஆண்டு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதற்கு, மத்திய அரசின் கொள்கைகள் காரணமா? தமிழ்நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் நிலை காரணமா?

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN/AFP/Getty Images

இது பற்றி பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட கேட்டிருந்தோம்.

நேயர்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

துரை முத்துசெல்வன் என்ற நேயர், "மத்திய அரசின் கொள்கை முடிவு தான் தவறு என்று ஒரு விதத்தில் ஏற்று கொள்ளலாம். தமிழகத்தில் நிதி பற்றாகுறை ஏற்பட்ட சூழ்நிலையிலும் வறட்சி தாண்டவம் ஆடிய நேரத்திலும் வரிகளை வசூலித்து சக்கையாக மக்களை ஏறிந்துவிட்டது. மாநில மக்கள் நலம் எல்லாம் முக்கியம் இல்லை அவர்களுக்கு தேவையெல்லாம் வரி தான். தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை மிகமிக முக்கியமானதாகும்."

"அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அன்பளிப்பு கூட தொழிலதிபர்கள் கட்ட பயப்படுவதாக செய்திகள் வருகிறது.ஓட்டுக்கு பணத்தையும், இலவசத்தையும் ஆசைபட்டால், வளர்ச்சியா வரும்? வெங்காயத்தைகூட ஜிஎஸ்டி கட்டி வாங்க வேண்டிய சூழ்நிலைதான் வரும்," என்று பதிவிட்டுள்ளார்

சக்தி சரவணன் என்ற நேயரின் கருத்து பின்வருவது:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்குப் பெரும்பங்கு வகுக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கும் நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சிறு அளவு குறைந்தாலும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதென்பது இயல்பானது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பிரதானமாக விளங்கும் வேளாண்மை, சிறு குறு தொழில்கள் நடுவணரசின் பண மதிப்பிழப்பு மற்றும் புதிய வரி கொள்கைகளால் பெருமளவில் பாதிப்படைந்ததே மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகித குறைவுக்கு முதல் காரணமாகும்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலால் பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் பாதிப்பென்பது மிகவும் குறைவேயாகும்.

சரோஜா பாலசுப்பிரமணியன் என்ற நேயர், "மாநில அரசின் இலவசங்களும் வருவாயை பெருக்க எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லாத அதிமுகவும், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் கொள்கைகளாலும் தமிழகத்தின் பொருளாதாரம் சரிந்தது" என்று கூறியுள்ளார்

விஜய் செல்வத்தின் கருத்து:

மத்திய அரசு எதிர்கால கொள்கைளை ஓரளவு வைத்து நகர்கிறது. தமிழக அரசு கொள்கைகளே இல்லமால் சம்பிரதாயபடி நடக்கிறது.

இரு அரசுக்கும் நல்ல உடன்படிக்கை இல்லை என்றே தோன்றுகிறது. மத்திய அரசு எதிர்கால கொள்கையை கடைபிடித்தாலும் மக்களை அவதி படுத்தும் நிலையில் வைக்கிறது.

சிதம்பரம் முருகேசன் குமரேசன், மத்திய அரசின் கொள்கைகளும் தமிழ்நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் நிலை என இரண்டும் காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்