“சாராயத்தை எரிபொருளாகக் கொண்டு அரசு இயங்கும் போது பூரண மதுவிலக்கு கானல் நீரே!”

டாஸ்மாக் எலைட் பார்களில் ஆன்லைனில் மதுவாங்க மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பூரண மதுவிலக்கு கோரிக்கைக்கு எதிராகச் சென்று இது சமூகத்தை சீரழிக்கும் என்ற வாதம் சரியா? பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை. எனவே மதுவிற்பனையை இது ஒழுங்குபடுத்தும் என்ற வாதம் சரியா?

இந்த கேள்விகள் பற்றி தங்களின் கருத்துக்களை பதிவிடுவதற்கு பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

நேயர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.

சரோஜா பாலசுப்பிரமணியன் என்னும் நேயர், "இலவசமாக கொடுக்க வேண்டிய கல்வியை தனியாரிடமும், தனியார் நடத்தவேண்டிய மது விற்பனையை அரசும் செய்தால் மக்கள் எப்படி உருப்படுவார்கள்? மொத்தத்தில் மதுவே மக்களுக்கு தீங்கானது. இதில் ஆன்லைனில் விற்கும்போது அமோகமாக விற்கும். அரசுக்கு வருவாய் கூடும். ஆனால் மக்களுக்கு? பெரும்பாலான குற்றங்கள் மதுவாலேயே நடக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்," என்று ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஹான்ஸ் நரசிம்கான் என்ற நேயரோ, இப்படியே விட்டால் லஞ்சம், ஊழல், விபச்சாரம், திருட்டுதனம், கொலை, கொள்ளை ஒழிக்க சாத்தியமில்லை என்றால் காவல் துறையை முடிவிடலாமே என்கிறார்.

சந்தோஷ் ரபேல் என்ற நேயர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், மது ஆலைகளை வைத்திருப்பவர்களே அரசியல்வாதிகள் தான்!மதுவிலக்கு என்பது வெறும் தேர்தல் கோஷமே!!! என்று தெரிவித்திருக்கிறார்.

ரமேஷ் சுப்ரமணி என்ற நேயரோ, மக்கள் எவ்வழியோ ஆட்சியாளர்களும் எவ்வழியே!

அறபோதை அன்பர்கள் அதிகமாகும் பட்சத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இது போன்ற செயலிகள் வருவது இயல்பு. ஆக்கப்பூர்வமான செயல்களை விட்டுட்டு இதுபோன்ற அழிவுப்பூர்வமான செயல்களுக்கு அறிவியல் பயன்படுவது அவமானத்திற்குறியது... என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மக்களுக்கான அரசே மது விற்பனை செய்வதே தவறு, அதிலும் ஆன்லைனில் விற்பனை செய்வது என்பது மகா கேவலமான செயல் என்கிறார் வாசு நாராயணா.

அருண் என்கிற நேயர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், பூரண மதுவிலக்கு என்பது படி படியாக தான் முடியும். இந்த மாதிரியான விற்பனைக்கு இடமளிக்காமல் அரசு கட்டுபடுத்தவேண்டும் என்கிறார்.

புலிவாலாம் பாஷா தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், தமிழக அரசு கல்விக்கு காட்டாத முக்கியதுவத்தை மதுவுக்கு காட்டுவது மிகவும் வேதனையான விசயம்!!!! என்கிறார்.

துரை முத்துசெல்வம், பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்பது தான் சரி. செயலியை ஆரம்பித்தது ‘டோர் டெலிவரி‘ எல்லாம் ஏற்கவே முடியாத செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் சமூக வலைதளத்தில் ஆசைதம்பி பதிவிட்டுள்ள கருத்தில், அரசு எந்திரம் சாராயத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் போது பூரண மது விலக்கு என்பது கானல் நீரே! என்கிறார்.

வேலாயுதம் கந்தசாமி என்பவர், துரதிர்ஷ்டவசமாக முற்றான மதுவிலக்கு சாத்தியமற்றது. ஒழுஙகுபடுத்துவது சிறந்தது என்கிறார்.

முதலில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். ஆன்லைனிலும் கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். எதைக் கொண்டு வந்தாலும் மது விற்பனையைத் தடுக்க முடியாது. பூரண மதுவிலக்கு ஒன்றுதான் வழி என்கிறார் சுப்பு லட்சுமி.

மதிவாணன் என்ற நேயர், தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நிலைமையை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியோருக்கு வழங்கும் ஊக்க மற்றும் உதவித்தொகைகள், ரேஷன் பொருள்கள் தேடிச்சென்று வாங்கும்நிலை, ஆனால் நாட்டையும் வீட்டையும் கெடுக்கும் மது வீடு தேடி வரும்... சூப்பர்.. என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.

நடராஜ் வேணுகோபால் என்பவர், எது நடக்கிறதோ, அது நன்றாக நடக்கிறது. என்ன கொண்டு வந்தாய். இறப்பதற்கு. எல்லாம் இங்கு இருந்து எடுக்கப்பட்டது என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அசோக் அனிஸ் என்ற நேயர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், திராவிட ஆட்சியாளர்களின் சாதனையில் இதுவும் ஒன்று. வேறு என்ன திட்டத்தை இவர்களிடம் எதிர்பார்க்க முடியும் என்ற ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

பெண் மது அருந்தினால் மட்டும் குற்றமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நவீன யுகத்தில் மது அருந்துவதில் பெண்ணுக்கு பாரபட்சமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்