செய்தித்தாளில் இன்று: ஒரே நேரத்தில் 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்புகிறது இரயில்வே

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இன்று பெரும்பான்மையான இந்திய பத்திரிகைகளின் முதற்பக்கத்தை நேற்று முந்தினம் மாரடைப்பால் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி குறித்த செய்திகளே ஆக்கிரமித்துள்ளன.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுச்சேரியில் நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "வரும் ஜூன் மாத்திற்கு பிறகு, இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டுந்தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கும்" என்று கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் தனது முதற்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ரயில் ஓட்டுனர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள், வெல்டர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் உதவியாளர் பதவிகளுக்கு சுமார் 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை இந்திய ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளதாகவும், மேலும் இது உலகிலேயே மிகப் பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பாக கருதப்படுவதாகவும் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை-சேலம் இடையேயான பசுமை விரைவுச் சாலை திட்டத்தை சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்குறிய ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் டெண்டர் வெளியிடப்படும் என்றும் மத்திய சாலை, கப்பல் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

தமிழகம் மற்றும் புதுசேரிக்கு இரண்டுநாள் பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோதி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமன நிலையத்திலிருந்து புறப்படும்போது வழியனுப்ப சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமி அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவக்கோரி மனுவொன்றை அளித்ததாக ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன்

பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்ற விழாவில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவதும் குறைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் சார்ந்த கார்ட்டூனை வெளியிட்டுள்ளது தினமலர்.

பட மூலாதாரம், DINAMALAR

தினமலர்

"தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று தினமலர் நாளிதழ் செய்தி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், வரும் கல்வியாண்டு முதல் ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மாநகராட்சிகளை போன்று தமிழகத்திலுள்ள நகராட்சிகளிலும் ஆன்லைன் வாயிலாக கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது அமல்படுத்தப்படவுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

புதுச்சேரியின் வளர்ச்சி தடைக்கு, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியும், யூனியன் பிரதேசத்தில் பெரும்பாலான காலம், ஆளும் கட்சியாக காங்கிரஸ் தொடருவதுமே முக்கிய காரணம் என பிரதமர் நரேந்திர மோதி சாடியுள்ள செய்தி தினமணியில் முதன்மை செய்தியாக வந்துள்ளது.

புதிய புதுச்சேரி உருவானால்தான் புதிய இந்தியா உருவாக முடியும். நவீன இந்தியா உருவாக புதுச்சேரி மக்கள் துணை நிற்க வேண்டும் எனவும் பிரதமர் வலுயுறுத்தியாக அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :