ஜெயலலிதா சிலை வடிவமைப்பு: மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை, அவரது முக அமைப்புடன் ஒன்றுபடவில்லை என பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜெயலலிதா சிலை வடிவமைப்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமா? இது மக்களுக்கு பயனளிக்காத தேவையற்ற வாதமா? என பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் கூறிய கருத்துகளை தொகுத்து வழங்கி உள்ளோம்.

சக்தி சரவணன், "மண், செங்கல், கருங்கல், சுண்ணாம்பு கலவை, மரம், இரும்பு, தங்கம், வெள்ளி, உலோகம், ஐம்பொன் போன்றவற்றில் உயர் கலைநயத்துடன் சரியான பரிமாண விகித அளவையில் கற்பனைச் சிலைகள், கடவுள் சிற்பங்கள், பாவைகள், தேர்கள், கலைக் கட்டடங்கள் என எண்ணற்ற அழியா கலை அம்சங்களின் பிறப்பிடமாகவும் சிற்பக் கலையின் முன்னோடியாகவும் தமிழகம் திகழ்வதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். இத்தகைய சிறப்புமிக்க மண்ணில் ஆளும் கட்சியின் மறைந்த தலைவர் சிலையின் வடிவமைப்பு கேலிக்குரியதாகி பல விமர்சனங்கள் எழுவதற்குக் காரணமானவர் அனைவருடைய செயல்பாடுகளில் முழு அர்ப்பணிப்பு உணர்வு குறைந்து வருவதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது." என்கிறார்.

தமிழக அரசே ஜெயலலிதாவுடைய பாணியில் இல்லாத போது சிலை மட்டும் எப்படி ஜெயலலிதாவை போல் இருக்கும் என்கிறார் புலிவலம் பாட்ஷா.

கலைக்குப் பேர்போன தமிழகத்தில் இப்படி ஒரு படைப்பு. இதை திட்டமிட்டு உருவாக்கி பார்வைக்கு வைக்க அனுமதித்த அதிகாரி/ அமைச்சர் யார்? என்று கேள்வி எழுப்புகிறார் பகீரதன் கந்தசாமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்