செய்தித்தாளில் இன்று: ஒகி புயல் நிவாரணமாக தமிழகத்துக்கு 130 கோடி

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இன்று பெரும்பான்மையான இந்திய பத்திரிகைகளின் முதற்பக்கத்தில், நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியே காணப்பட்டது

தினமணி

ஒகி புயல் மற்றும் பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.133.05 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என தினமணி தலைமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற உயர்நிலை குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் வெளியிட்டுள்ள கார்ட்டூன்

48ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியும், பாஜகாவின் 48 மாத ஆட்சியும் என பிரதமர் ஒப்பிட்டதை குறித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தினமலர்

படத்தின் காப்புரிமை தினமலர்

டைம்ஸ் ஆஃப் இந்தியா

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான கல்வி தகுதியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுவரும் நிலையில், பட்டதாரிகள் மற்றும் பத்தாம் வகுப்பு முடித்த ஓட்டுநர்கள்தான் அதிகம் விபத்தை ஏற்படுத்துவதாக அரசாங்க பதிவுகள் தெரிவிப்பதாக ’டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ செய்தி வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல்படி, 2016ஆம் ஆண்டு சுமார் 40 சதவீத சாலை விபத்துக்கள் பத்தாம் வகுப்பு வரை படித்த அல்லது அதற்கு மேல் படித்த ஓட்டுநர்களால்தான் நடைபெற்றுள்ளது என்றும், பள்ளி படிப்பை முடிக்காதவர்களால் 18 சதவீத விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து ஆங்கிலம்

தமிழ்நாட்டில் ஆறு முக்கிய சாலை திட்டங்கள் இந்த வருடம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதில் சென்னை பெங்களுரு நெடுஞ்சாலையும் அடங்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் காவிரி தீர்ப்பு குறித்து கேட்டதற்கு மத்திய அரசு "அதற்கான செயல்பாட்டில்" உள்ளது என்று தெரிவித்த அவர் பிற விவரங்களை தெரிவிக்கவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :