எப்படி இருக்கும் ஸ்ரீதேவியின் பூர்வீக வீடு? (காணொளி)

எப்படி இருக்கும் ஸ்ரீதேவியின் பூர்வீக வீடு? (காணொளி)

நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த ஊரான மீனம்பட்டியில் அவரது பூர்வீக வீடு உள்ளது. இந்த வீடு சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்ததால் சில மாதங்களுக்கு முன்தான் மராமத்து செய்து புதுப்பித்து உள்ளனர். ஊஞ்சலுடன் கூடிய வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை உள்பட நான்கு அறைகள் அதில் உள்ளன.

இதில் நுழைவு வாசலை ஒட்டியுள்ள அறையின் முன்பு ஸ்ரீதேவி தாய் மற்றும் தந்தையுடனும், தனியாகவும் உள்ள சிறுவயது புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்துள்ள வரவேற்பறைக்குச் சென்றால் அங்கே ஸ்ரீதேவியின் அப்பாவிற்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் பிறந்த மகன்களின் சிறுவயது புகைப்படமும், ஸ்ரீதேவியின் பெரியப்பாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராமசாமி மற்றும் உறவினர்களின் புகைப்படங்களும் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளன.

படுக்கை அறைக்குள் ஸ்ரீதேவியின் சிறுவயது புகைப்படமும், தாய் மற்றும் தந்தையுடன் உள்ள கருப்பு வெள்ளை புகைப்படமும் ஒட்டப்பட்டுள்ளது. இவ்வீட்டில் யாரும் வசிக்காததால் பணிப்பெண் ஒருவர் மட்டும் தினமும் வந்து துடைத்து சுத்தம் செய்து வரும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

ஸ்ரீதேவியின் பெரியம்மா பெங்களூரில் வசித்து வருகிறார். அவரது சித்தியின் மகன்களான சதிஷ் சில நாட்கள் ஸ்ரீதேவியுடன் தங்கியிருந்துள்ளார். பின்னர் மீனம்பட்டியில் வாழ்ந்து வந்துள்ள சதிஷ் இறந்துவிட்டார். மற்றொரு தம்பியான ஆனந்தன் மட்டுமே தற்போது பூர்விக இல்லத்தில் வசித்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :