நாளிதழ்களில் இன்று: மேலும் 1,251 கோடி ரூபாய் அதிகரிக்கும் நீரவ் மோதியின் முறைகேடு

  • 28 பிப்ரவரி 2018

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

படத்தின் காப்புரிமை FACEBOOK/NIRAVMODI
Image caption நீரவ் மோதி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் உஷா அனந்தசுப்பிரமணியன்-ஐ விசாரணை செய்த சி.பி.ஐ, வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புதிய தகவல்கள் அடிப்படையில் தொழில் அதிபர் நீரவ் மோதி முறைகேடு செய்த தொகையின் அளவை ரூபாய் 12,636 கோடியாக அதிகரித்துள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர்கள் ரூபாய் 11,360 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்ததாக அந்த வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தி இந்து தமிழ்

பிரதமர் நரேந்திர மோதி வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கு உண்டான செலவு விவரங்களை வெளியிடுமாறு மத்திய தலைமை தகவல் ஆணையம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி

பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 2013 முதல் 2017 வரை மோதி மேற்கொண்ட பயணச் செலவுகளை வெளியிட முடியாது என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்த விவரங்களை வெளியிட வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்திருந்தது.

தினமணி

சீன அதிபர் பதவிக் காலத்துக்கான கால வரம்பை நீக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஷி ஜின்பிங்

ஷி ஜின்பிங் வாழ்நாள் முழுதும் சர்வ வல்லமை படைத்த அதிபராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டால் அது இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும், தென்கிழக்கு ஆசியாவுக்கும் கவலை தரக்கூடியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் 42 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உள்ளன என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு சென்னையில் இருந்த இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: