சட்டீஸ்கர் என்கவுன்டர் : 10 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

சட்டீஸ்கர் மாநில எல்லையில் 10 மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

பட மூலாதாரம், EMMANUEL DUNAND

தெலங்கானா - சட்டீஸ்கர் மாநில எல்லையை ஒட்டிய பிஜய்ப்பூர் மாவட்டத்திலுள்ள புஜாரி கங்கெர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கிரேஹவுண்ட் போலீஸ் படையை சேர்ந்த காவலர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தெலங்கானா காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர், ''நாங்கள் இதுவரை 10 மாவோயிஸ்ட்கள் உடல்களை கைப்பற்றியிருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ALOK PUTUL

படக்குறிப்பு,

கோப்புப் படம்

மாவோயிஸ்ட்களுடனான துப்பாக்கிச்சூட்டில், கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கிரேஹவுண்ட் போலீஸ் படையை சேர்ந்த காவலர் சுஷில் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தடபால் கிராமத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற காட்டுப்பகுதிக்கு கர்ரேகுட்டலு என்ற பெயர் உண்டு.

பட மூலாதாரம், ALOK PUTUL

படக்குறிப்பு,

கோப்புப் படம்

சம்பவ இடத்திலிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி ஒன்றும், இன்சா ரக துப்பாக்கிகள் இரண்டும், 12 போர் (12 BORE) ரக துப்பாக்கி நான்கும் கைப்பற்றப்பட்டதாக பிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் தலைவரும் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், பிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரி, துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :