இறைவனுக்கு நன்றி செலுத்த பெண்களாக அலங்கரிக்கப்பட்ட ஆண்கள்

  • 5 மார்ச் 2018

இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்களை பெண்களாக அலங்காரம் செய்து நடத்தப்பட்ட "காமுனி தகனம்" நிகழ்வை புகைப்படங்களில் வழங்குகின்றோம்.

படத்தின் காப்புரிமை DL NARASIMHA

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை நாளில் சில ஆண்கள் சேலை உடுத்தி, தங்க ஆபரணங்கள் அணிந்து தங்களை அலங்காரம் செய்து கொள்கின்றனர்.

படத்தின் காப்புரிமை DL NARASIMHA

கர்னூல் மாவட்டத்திலுள்ள அதோனி மன்டாலில் சந்தேகுட்லூரு என்ற கிரமத்தில் இந்த பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை DL NARASIMHA

கர்நாடக மாநிலத்தின் எல்லைக்கு அருகிலுள்ள சந்தேகுட்லூரு கிரமத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு உள்ளூரில் "காமுனி தகனம்" என்று அழைக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை DL NARASIMHA

இந்த கிரமத்தில் அமைந்திருக்கும் 'ரதி மன்மதா' கோயிலுக்கு செல்லும் ஆண்கள் வரங்கள் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

படத்தின் காப்புரிமை DL NARASIMHA

பின்னர், அவர்களின் விருப்பங்கள் எல்லாம் ரதி மற்றும் மன்மதாவின் ஆசீர்வாதங்களால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் நம்பினால், ஹோலி பண்டிகை நாளில் பெண்களின் சேலை உடுத்தி, தங்க ஆபகரணங்கள் அணிந்து அலங்காரம் செய்து கொண்டு, இந்த கோயிலுக்கு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை DL NARASIMHA

சிறப்பு உணவு வகைகளை தயாரித்து அவற்றை கோயிலில் படைக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை DL NARASIMHA

இந்தப் பாரம்பரியம் பல தலைமுறைகளாக தொடர்ந்து இந்தப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

படத்தின் காப்புரிமை DL NARASIMHA

ஹோலி பண்டிகை நாளில், இந்த நிகழ்வை பார்ப்பதற்காகவே இந்த கிராமத்திற்கு பலர் பயணம் மேற்கொள்கின்றனர்.

படத்தின் காப்புரிமை DL NARASIMHA

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்