இயேசு பற்றி மகாத்மா காந்தி கூறியது என்ன?

இயேசு கிறிஸ்து பற்றி மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஒன்று அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

1926ம் ஆண்டு ஏப்ரல் 6 என்று தேதியிடப்பட்டு காந்தி கையெழுத்திட்ட இந்த கடிதம், அமெரிக்காவில் அப்போது மூத்த மதப் போதகராக இருந்த மில்டன் நியூபெரி ஃபிரான்ட்ஸூக்கு எழுதப்பட்டதாகும்.

"மனிதகுலத்தின் மிகப் பெரிய ஆசிரியர்களில் ஒருவர்தான் இயேசு" என்று காந்தி எழுதியுள்ளார்.

இந்த கடிதம் தனியாரால் சேகரிக்கப்பட்ட ஒன்றாக பல தசாப்தங்களாக இருந்து வந்தது.

இது பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராப் ஏல நிறுவனத்தால் 50 ஆயிரம் டாலருக்கு விற்கப்படுகிறது.

காந்தி இந்தியாவில் பெரிதும் மதிக்கப்படுவதோடு, தேசத்தின் தந்தையாக அறியப்படுகிறார்.

படத்தின் காப்புரிமை RAAB COLLECTION

மதத்தின் தத்துவம் மற்றும் போதனைகள் பற்றி மிகவும் விரிவாக எழுதியுள்ள காந்தி இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார்.

கிறிஸ்தவம் பற்றிய வெளியீடு ஒன்றை வாசிப்பதற்கு வேண்டுகோள் விடுத்து அனுப்பப்பட்டிருந்த கடிதம் ஒன்றுக்கு பதில் அளிப்பதற்காக, இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் குஜராத் மாநிலத்திலுள்ள சபார்மதி ஆசிரமத்தில் அவருடைய வீட்டில் இருந்து காந்தி இந்த கடிதத்தை ஃபிரன்ட்ஸூக்கு எழுதினார்.

"அன்புள்ள நண்பருக்கு, உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் எனக்கு அனுப்பியுள்ள விசுவாச அறிக்கையை நான் ஏற்றுகொள்ளும் சாத்தியம் இல்லை. கண்ணால் காண முடியாத இயேசு கிறிஸ்துதான் கடவுளின் மிகவும் உயர்ந்த இறைவெளிப்பாடு என்று இந்த விசுவாச அறிக்கையை ஏற்றுக்கொள்பவர் நம்ப வைக்கப்படுகிறார். என்னுடைய எல்லா முயற்சிகளாலும், இந்த கூற்றின் உண்மையை உணர முடியவில்லை" என்று காந்தி எழுதியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :