வாதம் விவாதம்: “இதனால்தான் திரிபுராவில் தோல்வி அடைந்தனர் இடதுசாரிகள்”

  • 4 மார்ச் 2018

கம்யூனிஸ்டுகள் தங்கள் செல்வாக்கு மிகுந்திருந்த மேற்கு வங்கத்தை தொடர்ந்து திரிபுராவிலும் ஆட்சி இழக்கிறார்கள்.

இதற்கு, பாஜக-வின் வலதுசாரி அரசியல் காரணமா? கம்யூனிஸ்டுகளின் அரசியல் பிழைகள் காரணமா? என்று பிபிசியின் வாதம் விவாத் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு நேயர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

துரை முத்து செல்வன் என்கிற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், கம்யூனிஸ்ட்களின் அரசியல் பிழைகள் தான் பாஜகவின் வெற்றிக்கு காரணம். மோடியின் திறமையான நிர்வாகத்தை பார்த்து பாஜக தான் தங்களின் சரியான தேர்வு என முடிவுக்கு வந்து இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

சரோஜா பாலசுப்பிரமணியன் என்பவரோ, காலத்துக்குத் தகுந்த மாதிரி தங்களை செதுக்கத் தவறியதும், பழமையிலிருந்து புதுமைக்கு மாறாததும், கம்யூனிசத்தின் தவறுகள். அதை பாஜக நன்றாகவே பயன் படுத்திக்க கொண்டது.

மாணிக் சர்க்கார் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, வல்லவராகவும் இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

லோக்நாதன் ராஜன் என்ற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், திருபுரா மக்களை ஒரு நாகா அமைப்பு மிகவும் கஷ்டப்படுத்தியது. பொருட்களின் விலை மிக மிக அதிகமாகி மக்கள் மிகவும் துன்ப பட்டனர். மத்திய அரசு எந்த உதவியும் செய்ய வில்லை. இதனால் தான் கம்யூனிஸ்ட் கட்சி பதவி இழந்து விட்டது இதே பிரச்சினை BJP க்கும் வரலாம் என்று கருத்து கூறியுள்ளார்.

முத்து குமார் முவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், சீத்தாராம் யெச்சூரியின் செயல்பாடுகள் முக்கிய காரணம் என்கிறார்.

கரன் கண்டியா என்ற நேயர், மோடி ஆட்சியில் உள்ள வரை இந்தியா முன்னைறிக்கொண்டிருக்கும். மோடியை விமர்சனம் செய்தாலும் காங்கிரஸ் உடன் ஒப்பிட்டு உண்மையை அன்புடன் நெஞ்சில் வைத்து பெருமிதம் கொண்டுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை BJP - TWITTER

நௌஷாட் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், இந்திய வாக்காளர்களின் மனநிலை ஜாதி-வர்க்க அடிப்படையிலிருந்து மத அடிப்படை வாதத்தை நோக்கி நகர்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு என்று தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

சக்தி சரவணன் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், பொதுவுடைமைக் கொள்கைகளில் படிந்திருக்கும் கறையைத் தட்டி புதுப்பித்து பேரொளி வீசும் வண்ணம் வழி நடத்திச் செல்ல கறைப் படியாத தலைவர் பலர் இருந்தாலும் வலதுசாரி கொள்கையினரின் தந்திரங்களை முறியடிக்கும் தொழில்நுட்ப வல்லவர்களாக தங்களை புதுப்பித்து கொள்ளாமலேயே தொடர் தோல்விக்கு ஆளாகின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீநீவாசன் ரங்கசாமி என்பவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இது உண்மையிலேயே வருந்தத்தக்கது. இந்தியா முழுவதும் பிஜேபி வளர்வதை காட்டுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

சூரிய சோம்நாத் தியாகராஜன் என்ற நேயர், இது இந்தியாவின் தலைக்கு தானே வைத்து கொண்டிருக்கும் கொள்ளியின் உச்சம். மாயமானை நம்பி ஓடும் கூட்டம் இறுதியில் திரும்ப முடியாத ஒருவழி பாதையில் மிக வேகமாக பயணிக்க துவங்கிவிட்டது என்று .பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

செந்தில் குமார் நேயர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கருத்தில்,கம்யூனிசம் இனி இந்தியாவின் எடுபடாது. தொழிலாளர்களே வலது சாரிகளை ஆதரிக்கிறார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை கூறியுள்ளார்.

சிவா என்ற நேயர் கம்யூனிஸ்ட்களின் கொள்கை ஜோதிபாசுடன் முடிவுக்கு வந்தது என்று பதிவிட்டுள்ளார்.

Kathir Ivan காதிர் இவான் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், பிஜேபியின் ஆளும் கட்சி அதிகாரம் தான் வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

கலைவாணன் என்ற நேயர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், மார்க்ஸிஸ்ட்டுகளின் அரசியல் பிழைதான் பதவியை தக்க வைத்துகொள்ள தெரியவில்லை காங்கிரஸுடன் கூட்டணி ஏற்படுத்தி இருக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

பிமா ராவ் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், கம்யூனிஸ்ட் தங்கள் கொள்கை மாறி பல ஆண்டுகள் ஆகியும் திருந்தவில்லை, அதன் விளைவாக, ஆனால் இவர்கள் கையில் கடினம் வாழ்க்கை என கூறியுள்ளார்.

மனோகர் என்கிற நேயரோ, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கம்யூனிஸ்ட் கொள்கைகளை சரியான முறையில் கற்பிக்கப்பட வேண்டும் என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

புரிசைமான் என்பவர், மாணிக் சர்க்காரை போன்ற ஒருவரை தோற்கடித்ததுக்கு அவர்கள் கண்டிப்பாக அனுபவிப்பர் என்று கோபத்தை வெளிபடுத்தி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Kampan Raseeth அரசியல் பிழையாக இருக்கக் கூடும் ???? என்பது கம்பன் ரசீதின் கருத்தாகும்.

படத்தின் காப்புரிமை SUNIL DEODHAR/TWITTER

Arul Selvan மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அருள் செல்வன் தெரிவித்திருக்கிறார்.

அருண் என்கிற நேயர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், பாஜகவின் அதிகார அரசியல் தான் காரணம். என்று கூறுகிறார்.

வெற்றி கொண்டாட்டத்தில் திரிபுரா பாஜகவினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :