காலாவை தொடர்ந்து இணையத்தில் கசிந்தது ரஜினியின் '2.o` டீசர்

  • 4 மார்ச் 2018

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரம் 2.o திரைப்படத்தின் டீசர் இணையத்தில் கசிந்துள்ளது.

படத்தின் காப்புரிமை lycaproductions.in

லைகா தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது எந்திரன் 2.o திரைப்படம். இவ்வாண்டு வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும், இத்திரைப்படத்தின் பாடல்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான்.

தமிழக எல்லைகளை கடந்து இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது இத்திரைப்படம்.

இப்படியான சூழலில், இன்று காலை ட்வீட்டரில் யாரோ சிலரால் வெளியிடப்பட்டது இப்படத்தின் டீசர். அதிகாரப்பூர்வ வெளியீடுக்கு முன்பே ஒரு நிமிட டீசர் கசிந்துள்ளது.

காட்சிகள் தெளிவாக இல்லை என்றாலும், ரசிகர்கள் அந்த டீஸரை ரிட்வீட் செய்ய #2PointO என்ற ஹாஷ்டாக் ட்வீட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது.

கசிந்த காலா டீசர்

படத்தின் காப்புரிமை Wunderbar Studios

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினி நடித்த காலா திரைப்படத்தின் டீசரும் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு காலா டீசர் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், மார்ச் 1 நள்ளிரவே படத்தின் டீசர் சமூக ஊடகங்களில் கசிந்ததால், அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், அன்று இரவே தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் டீசரை வெளியிட்டார்.

இதுவரை 1.32 கோடி மக்களால் யுடியூபில் அந்த டீசர் பார்க்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்