தமிழ்நாட்டில் தாமரை மலருமா?

  • 5 மார்ச் 2018

25 ஆண்டுகள் கம்யூனிஸ்டுகள் ஆண்ட திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுபோல அவர்கள் தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுவது சரியா? தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையில் பாஜகவின் அரசியல் எடுபடாது என்று கூறுவது சரியா?

படத்தின் காப்புரிமை TWITTER.COM/AMITSHAH

பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் மேல் கூறிய கேள்விகளை நேயர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்

முகமது அலி என்கிற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், “வாக்குச் சீட்டு பயன்படுத்தி தேர்தல் நடத்தினால் அன்று தெரியும் மக்கள் ஆதரவு எப்படி என்று” என குறிப்பிட்டுள்ளார்.

ரமேஷ் சுப்ரமணி என்பவர், தமிழகத்தில் தாமரை பூக்காது என்கிறார்.

ஜெத்ரோ பகிராதன் கந்தசாமி என்பவர், வாக்காளர்கள் பலவழிகளில் பிரிக்கப்படுகிறார்கள். திராவிடத்துக்கு, தமிழ் தேசியத்துக்கு, இந்திய தேசியத்துக்கு,சினிமாவுக்கு,சாதிக்கு என்று வாக்குகள் பிரிந்தால் இடது சாரிய இந்துத்துவா காலூன்ற தமிழகத்தில் வாய்ப்புள்ளது. இன்று திரிபுராவில் நாளை தாய்த் தமிழகத்தில்???!!! என்கிறார்.

கார்த்திக் என்பவரோ, ஆட்சி வராவிட்டாலும் சில இடங்களை பெறக்கூடும் முன்பு எம்.பி. தேர்தலில் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இன்றோ கட்சி வளர்ச்சி பெற்று வருகிறது என்பது உண்மை. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

ஜார்ஜ் பெர்னான்டஸ் என்ற நேயர், பழமைவாத அரசியலாக இருந்தாலும் மன நிம்மதியோடு தூய்மையான காற்றை சுவாசித்து வாழ்ந்து வந்தவர்கள் மாற்றம் நினைத்தது தவறில்லை. அந்த மாற்றமே அவர்களின் அனைத்து நிம்மதியான வாழ்க்கைக்கு முடிவாகி உள்ளது என்றே எடுத்துக்கொள்ள முடியும் என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

விஜயகுமார் ராஜேந்திரன் என்பவர் தன்னுடைய ,பேஸ்புக் பதிவில், தமிழகத்தில் பா‌.ஜ.௧ ஆட்சி அமைப்பது என்பது கனவே! திரிபுரா மாநிலத்தை இதுவரை ஆண்ட கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை தேசிய கட்சிகள். ஆகையால் ஒரு தேசிய கட்சி அதுவும் மையத்தில் ஆளுகின்ற கட்சி வெற்றி பெறுவதென்பது எதிர்பார்க்கபட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அருண் என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகம் என்பது வேறு. அவர்களால் இங்கு ஒரு இடத்தை கூட பெற முடியாது என்று கருத்து கூறியுள்ளார்.

ஃபரூக் பாஷா என்பேவரோ தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், அது உண்மையல்ல. ஒவ்வொரு கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தன்பக்கம் இழுத்து தேர்தலை சந்திப்பதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கு, இதுக்கு பெயர் குறுக்கு வழி அரசியல் என்று எழுதியுள்ளார்.

ஜேம்ஸ் பாண்டு என்கிற நேயர், தமிழகத்தில் பாஜக வருவதற்கு சாத்தியமில்லை என்கிறார்.

தமிழகத்தில் தனது அணுகுமுறைகளை மக்களின் எண்ணம், எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்தால் நிச்சயம் ஆட்சி கட்டிலில் அமரும் பாஜக. ஆட்சியை பிடித்துவிட்டால் பாஜகவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாராலும் அசைத்து பார்க்க முடியாத நிலைக்கு மாறிவிடும் என்பது துரை முத்து செல்வம் என்பவரின் கருத்தாக உள்ளது.

பாலன் சக்தி என்றே நேயர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் பாஜவுக்கான களமே தமிழ்நாடு கிடையாது என்கிறார்.

ஒவ்வொரு மாநிலமும் கூட்டுச்சேர்ந்து பாஸிசத்தை ஒழிக்கலாம் என்று சாகுல் ஹமீத் பூலான்கால் கருத்து பதிவிட்டுள்ளார்.

லிங்கம் என்பகிற நேயர், வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அவர்கள் தமிழ் நாட்டில் இந்துத்துவா அமைப்புகள் அடக்கி வாசிக்க வேண்டும், அடுத்து சமூக பணியில் இறங்கி வேலை செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறி கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER @NARENDRAMODI

பெரியார் மண் இது. பாஜக அடுத்த நாடாளுமன்ற தேர்தலலில் வெல்வது மிக கடினமே என்று சதீஷ் ராமராஜ் எழுதியுள்ளார்.

கார்திக் குமார் என்கிற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், போன முறை ,,,57 தொகுதியில் ,,டெப்பாசிட் போனது,,,,இந்த முறை ஆட்சியை பிடித்தது.....உ.பி யில் அதை விட பயங்கரம்.....மக்கள் கையில் மட்டுமே” என்று மக்களின் முடிவை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

நௌஷாட் என்கிற நேயர் டுவிட்டர் பதிவில், நேர்வழியில வந்தால் நோட்டோவுக்கும் கீழ தான் என்று எச்சரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் ரஃபேல் என்கவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், பிஜேபியோ, காங்கிரஸோ இங்கு வெல்வது என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே கூட உதிக்கலாம், ஆனால் தாமரை ஒரு நாளும் தமிழ்நாட்டில் மலராது என்று சரோஜ பாலசுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.

வெங்கட்ராமன் தர்மராஜன் நடக்காதுன்னு எதுவும் இல்லை இப்பூமியிலே என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

முரளி தேவி என்கிற நேயர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கருத்தில், தலைகீழா நின்றாலும் தமிழ்நாட்டில் நடவாது என்றும் ஜோ மேரி என்பவர் தாமரை கருகுவது உறுதி என்றும் குறிபிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :