’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன’

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 6 வார காலத்தில் அப்பணிகள் நிறைவுபெறும் என மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார் என தினமணி பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தீர்ப்பிற்கு பிறகு காவிரி விவகாரம் தொடர்பாக நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்து, பின் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான அழுத்தம் தமிழகத்தின் தரப்பில் கொடுக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அந்த செய்தி கூறுகிறது

தினமலர்

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தில் ஒரு நிலைப்பாட்டையும், கர்நாடகாவில் ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பதை விளக்கும் கார்ட்டூன்

படத்தின் காப்புரிமை Dinamalar

ஞாயிறன்று, கார்த்தி சிதம்பரம் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகிய இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை செய்தபோது இந்திராணி முகர்ஜி, கார்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் வழங்கியதாக தான் கூறியதை மீண்டும் உறுதிப்படுத்தினார் என்னும் செய்தி ’டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ முதல் செய்தியாக வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

கேட்ட கேள்விகளுக்கு இந்திராணி அமைதியாக பதில் அளித்ததாகவும், முன்னாள் நிதியமைச்சரை சந்தித்ததும் பின் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து அவருக்கு லஞ்சம் வழங்கியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தி கூறுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாஜகாவை வீழ்த்த, பகுஜன் சமாஜ் வாதி கட்சி தனது எதிரிக்கட்சியாக கருதும் சமாஜ் வாதி கட்சியுடன் கைகோர்க்கவுள்ளதாக ’இந்தியன் எக்ஸ்பிரஸின்’ முதன் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவிற்கு பிறகு இந்த அறிவிப்பை சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் டிவிட்டர் மூலம் தெரிவித்ததாக அந்த செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :