'கர்நாடக தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் பற்றி மூச்சுகூட விடமாட்டார்கள்'

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரைச் சந்திக்க தமிழக அனைத்துக் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. இப்படியான சூழலில் அனைத்து கட்சி பிரதிநிதிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்திக்க மறுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக அனைத்துக்கட்சிக் குழுவை சந்திக்க பிரதமர் மறுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுவதில் நியாயம் இருக்கிறதா? பிரதமர் மறுக்கவில்லை என்ற தமிழக அமைச்சர்களின் வாதம் ஏற்கத்தக்கதா?

பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் மேல் கூறிய கேள்விகளை நேயர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

"நியாயம் இருக்கிறது. கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து கொண்டு தான் காங்கிரஸும், பாஜகவும் மவுன விரதம் மேற்கொள்கின்றன. பிரதமரை அனைத்து கட்சி குழு சந்திக்க முயல்வதை போல ராகுல் காந்தியையும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும் அனைத்து கட்சி குழு சந்திக்க முயற்சி வேண்டும். இரு கட்சிகளின் மவுனம் தேசியத்திற்கு ஆபத்து ஏற்படுத்த கூடியது. தேர்தல் அரசியலுக்காக தேசியத்தை மறந்துவிட கூடாது" என்கிறார் துரை முத்துசெல்வம்.

தமிழக அனைத்துக்கட்சிக்குழுவினரை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பது கண்டனத்திற்கு உரியது. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் கடமை மோதி அரசுக்கு உண்டு. காவிரி நீரில் கேவல அரசியல் வேண்டாம் என்கிறார் ஜெயகுமார்.

முத்து முகுந்த், "வெறும் கண்துடைப்பு இவர்களை பிரதமர் கண்டு கொள்ளவே மாட்டார் அதற்கு முக்கிய காரணம் விரைவில் கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்"என்கிறார்.

படத்தின் காப்புரிமை STR

இதே கருத்தைதான் சரோஜா பாலசுப்ரமணியனும் கூறுகிறார். அவர், "பாஜக வோ, காங்கிரஸோ, பிரதமரோ யாரும் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி மூச்சுகூட விடமாட்டார்கள் கர்நாடக தேர்தல் வரை. இதுதான் உண்மை." என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்