உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்று தடம் பதித்த மனு பாகர்

  • 6 மார்ச் 2018

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் ஹரியானாவைச் சேர்ந்த 16 வயது மனு பாகர், 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் என்ற செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை ISSF-Twitter

இளம் வயதில் உலக கோப்பையில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி

காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழகம், கர்நாடகம் உட்பட நான்கு மாநில தலைமைச் செயலாளர்களுடன் தில்லியில் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மத்திய ஆர்சு ஆலோசனை நடத்தவுள்ளது என தினமணி பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை மாலை திடீரென அவசர ஆலோசனை நடத்தினார் எனவும் அந்த செய்தி கூறுகிறது.

தினமலர்

படத்தின் காப்புரிமை dinamalar

இந்தியன் எக்ஸ்பிரஸ் - டெல்லி

திரிபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலை ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது என்ற செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து 48 மணி நேரங்களில் இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. ஜேசிபியை கொண்டு பிஜேபி ஆதரவாளர்களால் அந்த சிலை அகற்றப்பட்டுள்ளது மேலும் சிலை அகற்றப்படும்போது ’பாரத் மாதா கீ ஜே’ என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்