சுதந்திரத்திற்கு முன் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாகாணம் எது?

வாக்களித்த இந்திய மூதாட்டி படத்தின் காப்புரிமை Getty Images

சுதந்திரத்திற்கு முன் இந்திய பெண்களின் வாக்குரிமையின் நிலை என்ன? பெண்கள் தினத்தை ஒட்டி ஒரு மீள் பார்வை...

இந்திய பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பதற்கு மகாத்மா காந்தியும் முதலில் ஆதரவளிக்கவில்லை.

1921 ஆம் ஆண்டு சென்னை மற்றும் பம்பாய் மாகாணங்களில் குறிப்பிட்ட அளவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை முதன்முறையாக வழங்கப்பட்டது.

பின்னர், 1923 -1930 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஏழு மாகாணங்களை சேர்ந்த பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH/AFP/Getty Images
Image caption உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்த முஸ்லிம் பெண்கள்.

தங்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைப்பது தங்கள் கணவருக்கும் பிள்ளைகளும் பிடிக்காது என்று கருதியதாக சில பெண்கள் கூறினார்கள்.

பிரிட்டிஷ் அரசின் அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு பொருந்தும். சொத்துக்கு வரி செலுத்த கடமைப்பட்ட பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் மறுக்கப்பட்டது.

விவாகரத்து ஆன பெண், கைம்பெண், மற்றும் சொத்து இல்லாத பெண்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு கூறியது.

ஆனால் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் காசி மலைப்பகுதிகளில் தாய்வழி சமூகங்களில் பெண்களுக்கே சொத்துரிமை என்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு வாக்குரிமை கொடுக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை DIPTENDU DUTTA/AFP/Getty Images
Image caption பிகாரின் கிருஷ்ணகஞ்ச் மாவட்டத்தில் தாகூர்கஞ்ச் என்ற ஊரில் 2015ல் நடந்த தேர்தல் ஒன்றில் வாக்களிக்க வந்த பெண்ணின் மருதாணி வைத்த கைகளில் மைவைக்கும் ஆண் அலுவலர்.

சென்னை மாகாணத்தில், அரசு பணிபுரிந்து இறந்தவரின் தாயோ விதவை மனைவியோ ஓய்வூதியம் பெற்றால் அந்த பெண்ணுக்கு வாக்குரிமை இருந்தது.

கணவர் வரி செலுத்துபவராகவோ, சொத்துக்களை வைத்திருந்தாலோ அவரது மனைவிக்கும், தாய்க்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

அதாவது, ஒரு பெண்ணின் வாக்களிக்கும் தகுதியை தீர்மானிப்பது முற்றிலும் அவரது கணவரின் சொத்து, தகுதிகள் மற்றும் சமூக அந்தஸ்தை சார்ந்ததாக இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: