’பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்திய பெண்கள்’

தனது 15 வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று காந்தியடிகளை தன் மன திடத்தால் வியக்க வைத்த தில்லையாடி வள்ளியம்மை தொடங்கி, இன்று அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களையும், எதிர்ப்புகளையும் சர்வசாதரணமாய் எதிர்கொண்டு அடுத்தடுத்த மைல்கற்களை நோக்கி நடந்து கொண்டிருக்கும் அனைத்து பெண்களுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். பெண்கள் தினம் மட்டுமல்ல ஒவ்வொரு நாளுமே பெண்களுக்கான தினம்தான்.

அந்த வரிசையில் பெண்களால் நிகழ்த்தப்பட்ட பல சாதனை சம்பவங்களும், பெண்கள் பெருமை கொள்ளும் படி நடந்தேறிய சில சம்பவங்களையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

முத்துலட்சுமி ரெட்டி

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். புதுக்கோட்டையில் பிறந்தவர். சிறு வயதிலேயே பெண்களை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் உடைய காலத்தில் அதை எதிர்த்து ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாய் உயர்கல்வி பயின்றார்.

தேவதாசி முறையையும், குழந்தை திருமணத்தையும் ஒழிக்க பாடுபட்டவர்.

கல்வி என்பது பெண்களுக்கு எத்தனை முக்கியம் என்பதை உணர்த்திய முத்துலட்சுமி ரெட்டி, பெண் சமத்துவத்திற்கும் பாடுபட்டவர். முத்துலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் பெண்கள் அனைவருமே பெருமை கொள்ள வேண்டியவர்கள் என்பதை மறுக்க இயலாது

சர்லா தக்ரால் - முதல் பெண் விமானி

பெண் சாதனையாளர்களை பற்றியும், பெண்களால் நாம் பெருமை அடைந்த தருணங்களை பற்றியும் பேசும்போது நம்மால் சர்லா தக்ரலைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. விமானிக்கான உரிமத்தை பெற்ற முதல் இந்திய பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர் சர்லா தக்ரால்.

இந்திரா காந்தி

படத்தின் காப்புரிமை Getty Images

’இரும்பு மனுஷி’ என்று அறியப்படும் இந்திரா இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்றிருப்பதை தாண்டி, இந்திய அரசியலில் அதிர வைக்கும் பல முடிவுகளை எடுத்த அவரின் அரசியல் ஆளுமை இன்றளவும் வியக்கதக்க ஒன்றே.

உள்ளத்தின்உறுதியே ஊன்றுகோல்: தடைகளை தகர்த்த பூர்ணிமா

கல்பனா சாவ்லா

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லா. 1997ஆம் ஆண்டு அவர் விண்வெளிக்குச் சென்றார்; இன்று அவர் உயிரோடு இல்லை என்றாலும் அவரின் சாதனை இந்திய பெண்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை அளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

விண்வெளி விஞ்ஞானிகள்’

’மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பி சாதனை படைத்தது இந்தியா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால், அதில் பணியாற்றிய பெண் விஞ்ஞானிகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் விண்வெளி தொடர்பான துறைகளில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துவர் என்ற கூற்றை மாற்றியவர்கள் அவர்கள்.

படத்தின் காப்புரிமை ASIF SAUD
Image caption செவ்வாய்கிரகத்திற்கு விண்கலத்தை ஏவும் திட்டத்தில் பணிபுரிந்த பெண் விஞ்ஞானிகள்.

விண்ணையும் வசப்படுத்தும் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்திய பெருமையுடன் அதில் பெண் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியமானவை என்பது பெருமை தரும் தருணமாகவே உள்ளது. இந்த சாதனைக்கு பிறகு பிபிசியிடம் பேசிய இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியான அனுராதா இஸ்ரோவில் பணிபுரியும் 16,000 ஊழியர்களில் 20-25 சதவீதம் பெண்கள் என்ற கருத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டதையும் நாம் நினைவில் கொள்ளலாம்.

விளையாட்டுத் துறையில் பெண்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

சமீப காலங்களில் விளையாட்டுத்துறையில் பெண்களின் சாதனை அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், சாய்னா நேவால், பி.வி.சிந்து, மித்தாலி ராஜ் என பட்டியல் நீண்டு கொண்டே போகும் வேளையில் தமிழக பெண்கள் கால்பந்து அணி தேசிய கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. தடைகளை தாண்டி சாதிக்க முயலும் பெண்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டே.

ரூபா தேவி

தமிழகத்தின் தென் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில், கால்பந்து வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கிய ரூபா தேவி, 2016-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டது தமிழகத்திற்கு பெருமைமிக்க தருணம் மட்டுமல்ல எளிய குடும்பத்தில் பிறந்து விளையாட்டுத் துறையில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் இவர் ஒரு உத்வேகம் குறிப்பாக பெண்களுக்கு.

ரூபா தேவி: வேடிக்கை பார்த்த சிறுமி, கால்பந்து வீராங்கனை, பின் ஃபிஃபா நடுவர்

நிர்மலா சீதாராமன் - முதல் முழுநேர பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற சிறப்பை பெறும் நிர்மலா சீதாராமன், தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் பெருமை. வலிமைவாய்ந்த துறைகளில் ஒன்றாக கருதப்படும் பாதுகாப்பு துறைக்கு பெண் அமைச்சர் என்பது பெண்களுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என்றே கூறலாம்

பிற செய்திகள்:

தொடர்புடைய தலைப்புகள்