திருச்சியில் உயிரிழந்த உஷாவுக்கு பிரேத பரிசோதனை

காவல்துறை ஆய்வாளர் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு விரட்டி வந்து மிதித்ததால், விழுந்து இறந்ததாக கூறப்படும் உஷாவின் சடலம் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தர்மராஜா - உஷா தம்பதியர் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள  பைக்கில் பயணித்தபோது, தலைக்கவசம் அணியாமல் இருந்தது பற்றி காவல் ஆய்வாளர் காமராஜ் விசாரித்துள்ளார்.

பின்னர் டிரைனிங் சென்டர் கணேசா ரவுண்டானா வரை 2 கி.மீ தூரம் விரட்டி வந்து அவர்களை மிரட்டி எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், நிலை குலைந்த ராஜா தடுமாறி கீழே விழுந்ததில் அவரது மனைவி உஷாவின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

இதனை அடுத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் எட்டி உதைத்து கொலை செய்த காவல் ஆய்வாளர் காமராஜை கண்டித்து சாலை மறியலில் இறங்கியதால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. .

மக்கள் கூட்டத்தால், திருச்சி தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து மூன்று மணி நேரத்திற்கு மேல் முற்றிலும் முடங்கிய நிலையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதுஈ சிலர் தாக்குதல்களில் ஈடுபட தொடங்கினர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

நிலைமைய கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறை, அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டு செயல்பட்டதால், இயல்பு நிலை தொடங்கியது.

இப்போராட்டத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக 25 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. போராட்டம் முற்றிலும் ஒடுக்கப்பட்டதை தொடர்ந்து உஷாவின் உடல் இரவு 2 மணியளவில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்து. 

Image caption காவல் ஆய்வாளர் காமராஜ்

இன்று காலை முதல் உஷாவின் மரணத்திற்கு காரணமான ஆய்வாளர் காமராஜை கைது செய்து கடுமையான குற்ற வழக்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், மக்கள் கலை இலக்கிய கழகம், முஸ்லிம் அமைப்புகள், உறவினர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசு உஷாவின் குடும்பத்திற்கு 7 இலட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்