காவிரி நதிநீர் பங்கீடு: டெல்லியில் இன்று நான்கு மாநில அதிகாரிகள் கூட்டம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநில அதிகாரிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டம் மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தி இந்து

படத்தின் காப்புரிமை Siddaramaiah - CM of Karnataka / Facebook

கர்நாடக மாநிலத்துக்கான தனி கொடியை அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா வியாழனன்று வெளியிட்டார்.

மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டால், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு பிறகு தனிக்கொடி உடைய இரண்டாவது இந்திய மாநிலம் எனும் பெருமையை கர்நாடகா பெறும்.

சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள கர்நாடக மாநிலத்தில் தனிக்கொடி காங்கிரஸ் கட்சியின் பிரசார உத்திகளில் ஒன்றாக உள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

படத்தின் காப்புரிமை Hindustan Times

இந்து மதத்தில் அகிலா அசோகனாகப் பிறந்து ஷஃபின் ஜஹான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறிய கேரளாவைச் சேர்ந்த ஹாதியாவின் திருமணம் செல்லாது என்று கேரளா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறித்து டெல்லியிலிருந்து வெளியாகும் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

ஹாதியாவின் திருமணம் 'லவ் ஜிகாத்' என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு கிடைத்துள்ள இந்த சுதந்திரம் கொண்டாடப்படவேண்டியது என்றும் அவர் அனுபவித்த இன்னல்கள் தான் அணுகிய ஆபத்தான வழிமுறை குறித்து, நீதித்துறைக்கு ஒரு நினைவூட்டலாகவும் இந்தத் தீர்ப்பு இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை TWITTER

திரை அரங்குகளுக்கு விதிக்கப்படும் 8% கேளிக்கை வரியை எதிர்த்து, வரும் 16ஆம் தேதி முதல் திரை அரங்குகள் மூடப்படும் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து மார்ச் 1 முதல் திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாததால் திரை அரங்குகளில் ஏற்கனவே வசூல் குறைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: