சென்னை: கல்லூரி வாசலில் கத்திக்குத்து - மாணவி பலி

சென்னையில் கே. கே. நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் அந்த கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

மாணவி அஸ்வினி இறந்துவிட்டதாக பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்திய சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பொதுமக்கள் தாக்கியதில் அழகேசன் பலத்த காயம் அடைந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

''அழகேசன் அஸ்வினியை குத்திவிட்டு, தீக்குளிக்க தன்மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடனடியாக அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவுள்ளோம்,'' என காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

அஸ்வினி மற்றும் அழகேசன் இருவரும் மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் நண்பர்களிடமும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி வாசலில் மாணவி ஒருவரை கத்தியால் இந்த இளைஞர் குத்தியது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்