கௌரி லங்கேஷ் கொலை: ஆயுத கடத்தல்காரர் கைது

இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook/Gauri Lankesh

கேடி நவீன் குமார் என்பவர் முன்னதாக ஆயுதக் கடத்தலில் கைது செய்யப்பட்டிருந்தவர். ஆனால், அவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொலையில் தன்னுடைய பங்கு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு நகரில், அவருடைய வீட்டுக்கு வெளியே கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு கொல்லப்பட்ட மிகவும் மூத்த பத்திரிகையாளர் இவராவார். அவருடைய கொலை இந்தியா முழுவதும் போராட்டங்களை தூண்டியது.

இந்த வழக்கில் நவீன் குமார் முக்கிய குற்றவாளி இல்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Kashif Masood

பத்திரிகையாளரான லங்கேஷ் அமைப்பு முறைகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கித்தாரிகளால் தலையிலும், மார்பிலும் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை.

அவருடைய கொலைக்கு ஒரு வாரத்திற்கு பின்னர் தலைநகர் டெல்லி உள்பட இந்தியாவின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இடதுசாரி பார்வையுடையவராக அவர் அறியப்பட்டார். ஒரு வாரந்தர பத்திரிகையின் பதிப்பாசிரியராக அவர் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு கன்னையா குமார் என்கிற மாணவர் தலைவரை லங்கேஷ் தத்து எடுத்தார்.

படத்தின் காப்புரிமை facebook
Image caption 2016ம் ஆண்டு கன்னையா குமார் என்கிற மாணவர் தலைவரை லங்கேஷ் தத்து எடுத்தார்.

அரசியலில் இந்து அடிப்படைவாதம் பற்றி கடுமையான விமர்சனமும், சாதி அமைப்புக்கு எதிரான கடும் எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தி வந்தார்.

இந்து தீவிர உணர்வுடையவர்கள், பத்தரிகையாளர்களை இலக்கு வைப்பது அதிகரித்து வருவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்து தேசியவாதிகளை விமர்சனம் செய்கிற பத்திரிகையாளாகள் சமூக வலைதளங்களில் வசை மொழிகளை பெற்று வருகின்றனர். பல பெண் செய்தியாளர்கள் பாலியல் வல்லுறவு மற்றும் தாக்குதல் செய்யப்படுவர் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்களை பாதுகாப்பதில் மிக மோசமான பதிவேட்டை வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை அரசு சாராத நிறுவனமான பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழு வகைப்படுத்தியுள்ளது.

1992ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் அவர்கள் செய்த பணிக்காக 27 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்