கனவுகளுக்காக இயலாமையுடன் போராடும் 7ஆம் வகுப்பு மாணவி

  • 11 மார்ச் 2018
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கனவுகளுக்காக போராடும் ஆர்த்தி

கால்சியம் குறைபாட்டால் சிறு வயது முதலே எலும்புகள் அடிக்கடி முறிந்து பள்ளி செல்ல முடியாத நிலையில் இருந்து, தற்போது தனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பள்ளிக்கல்வியைத் தொடரும் கோவையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக உதவியை எதிர்நோக்கியுள்ளார்.

கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கிறார் ஆர்த்தி.

ஆர்த்தி முன்று மாத குழந்தையாக இருந்த போதே கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு மஜ்ஜை கோளாறு ஏற்பட்டது. இதனால் எலும்பு உடையும் நிலை ஏற்பட்டு 1ஆம் வகுப்பில் இருந்து 4ஆம் வகுப்பு வரை பள்ளி செல்ல இயலவில்லை.

ஆர்த்தியின் படிக்கும் ஆர்வத்தினாலும் அனைவருக்கும் கல்வி இயக்க மாற்று திறனாளிகள் குழந்தைகள் சிறப்பு ஆசிரியர் அறிவுறுத்தலினாலும் மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பில் இருந்து பள்ளியில் சேர்ந்தார் ஆர்த்தி.

அங்கு ஆர்த்திக்கு மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் சிறப்பு ஆசிரியர் செல்வ லக்ஷ்மி பாடம் கற்றுக்கொடுப்பார்.

"நல்ல நிலையில் பிறந்து வளர்ந்திருந்தாலே பல குறைகளைக் கண்டுபிடிக்கும் இந்த உலகில், நான் எதையும் நினைத்து வருத்தப்படாமல் ஆசிரியர் ஆவது எனும் என் கனவை நோக்கிப் பயணிக்கிறேன்," என்று தன்னம்பிக்கை ததும்பும் குரலில் கூறுகிறார் ஆர்த்தி.

ஆர்த்தியின் தந்தை மாரிமுத்து சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். வாடகை வீட்டில்தான் வசித்து அவரது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

"ஆர்த்தியின் உடல் கோளாறுக்காக தனியார் அல்லது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முலம் எலும்பு மஜ்ஜை அறுவைசிகிச்சை செய்யும் உதவி கிடைத்தால் இன்னும் ஆர்த்தியினால் சிறப்பாக செயல்பட இயலும்," என்று கூறுகிறார் ஆர்த்தியின் தாய் செல்வி.

மேல் சிகிச்சைக்காக மங்களூர் செல்ல உள்ளேன் எனவும் அதற்கு மருத்துவர்கள் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார் ஆர்த்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்