#வாதம் விவாதம்: ''மன்னிப்பு என்பது வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்கனும்''

ராகுல்காந்தி படத்தின் காப்புரிமை Getty Images

தம் தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை மன்னித்துவிட்டதாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

``இந்த மன்னிப்பு அறிவிப்பால் நடைமுறையில் ஆவது ஏதும் உள்ளதா? இது வெறும் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான பேச்சா?`` என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே..

``இதில் அரசியல் ஏதுமில்லை, தந்தையைக் கொன்றவர்களை மன்னிக்கப் பெரிய மனம் வேண்டும். ராகுலைப் பாராட்ட வேண்டும். ராகுலே மன்னித்த பிறகு மத்திய அரசு மன்னித்து அவர்களை விடுவிக்கலாம். இதை விட பெரிய தண்டனைக் குற்றவாளிகளுக்கு இருக்க முடியாது.`` என்கிறார் சரோஜா.

``நிச்சயமாக இந்த அறிவிப்பால் மாற்றம் நிகழும் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முயன்றால் மத்திய அரசுக்கு நேரு குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும். எதிர்ப்புகள் இருக்கும் பட்சத்தில் விடுதலை செய்தால் பாஜகவுக்கு எதிர் வரும் தேர்தல் களங்கள் தோல்வி முகம் காட்டும். இப்போது குற்றவாளிகளுக்கு ராகுல் மன்னிப்பு வழங்கியதைப் பார்க்கும் போது இயற்கையான விடுதலை அவர்களுக்குக் கிடைத்து இருக்கிறது. இனி நீதிமன்றத்தின் கையில் தான் இருக்கிறது.`` என தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார் துரை முத்து செல்வன்.

``இந்திரா காந்தியை கொன்றவர்கள் கொல்லப்பட்டு விட்டனர். காலிஸ்தான் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு விட்டனர். ராஜீவ் காந்தி கொலையாளிகளும் கொல்லப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் ஆட்சி உதவியுடன் அழிக்கப்பட்டனர். காலம் கடந்தபின் ஞானோதயமா?`` என கேள்வி எழுப்புகிறார் சுரேஷ் நாகராஜன்.

``காலம் சிலரது மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் பக்குவமாக இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்`` என கூறுகிறார் நிசார் அகமது.

``காலம் கடந்த மன்னிப்பு பிரயோசனமற்றது. குற்றவாளிகள் ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டார்கள்.`` என்கிறார் ராதா.

``உள்நோக்கம்... 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு`` என கருதுகிறார் ஹரி எனும் நேயர்.

``அரசியல் ஆதாயம்`` என்கிறார் மணிகண்டன்.

``மன்னிப்பு என்பது வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்கனும். முதலில் ராஜிவ் காந்தி படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின் இதனைக் கூறி இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியும் . 7 பேர் விடுதலைக்கு இப்போதும் மறுப்பு செய்பவர்கள் காங்கிரஸ்காரர்களாக இருக்கும்போது மன்னிப்பு என்ற வார்த்தை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ?. மன்னிப்பு என்ற வார்த்தைக்குப் பல காரணம் இருக்கின்றன.`` என பதிவிட்டுள்ளார் தாஸ்.

``சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால் இவரை நம்பலாம்`` என்கிறார் ராஜ்.

``எல்லாம் அரசியல் தான்`` என பதிவிட்டுள்ளார் செல்வா.

``மன்னிப்பு என்பது மனிதனின் மாண்பு.`` என்கிறார் பால முருகன்.

``இலங்கையில் தமிழ் இனத்தையே ஏறக்குறைய அழித்து விட்டபின் அதன் வடு, வேதனை உலகெங்கும் உள்ள தமிழர்களின் கோபம் என்றும் தீராது`` என்கிறார் வெங்கடாசலம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :