செய்தித்தாளில் இன்று: "அயோத்தியில் ராமர் கோயில் மட்டுமே கட்டப்படும்" - ஆர்.எஸ்.எஸ்

  • 12 மார்ச் 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாக்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளரான பையாஜி ஜோஷி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் மட்டும்தான் கட்டப்படும் என்றும், வேறு எதுவும் கட்டப்படாது என்றும் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் சொத்துவரி, மின்சாரம் மற்றும் மெட்ரோ வாட்டர் உள்ளிட்ட பல சேவைகளுக்கான கட்டணங்களை ஸ்மார்ட் கார்டுகளின் மூலம் கட்டுவதற்கான திட்டத்தை தனியார் வங்கியுடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

டெக்கான் கிரானிக்கல்

சந்திரயான் ஒன்று விண்கலத்தின் வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்து, நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டு வரும் சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் அல்லது அக்டோபர் மாதம் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளதாக டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை ISRO.GOV.IN

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் உள்ள நிலையில், கேரளாவுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே முதல் இடத்தைப்பெற்றுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 17.41 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் டெக்கான் கிரானிக்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்

மாநில அரசியல் கட்சிகளின் சொத்து விவரப் பட்டியலில், தி.மு.க. இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது தொடர்பாக இன்று கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ்.

படத்தின் காப்புரிமை DINAMALAR

தினமணி:

டெல்லியில் நேற்று நடைபெற்ற 121 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு உலக நாடுகள் கூடுதல் சலுகைகளை அளிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளதாக முதற்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான டிடிவி தினகரன் மதுரையிலுள்ள மேலூரில் வரும் 15ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: