#வாதம் விவாதம்: ஒழுங்குப்படுத்துவது அரசு கடமை; பின்பற்றுவது தனிநபர் கடமை

  • 13 மார்ச் 2018
வாதம் விவாதம்

குரங்கணியில் மலையேறும் பயிற்சிக்காக சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலி. ''இதுகுறித்த போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்வது தனிநபரின் கடமையா?, உரிய விதிமுறைகளுடன் ஒழுங்குபடுத்துவது அதிகாரிகளின் கடமையா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே.

``இரண்டும்தான். நம் நாட்டில் விதிகளை மீறியே பழக்கப் பட்டு விட்டோம்.அந்த விதி மீறல்கள் நம் உயிருக்குத்தான் உலை வைக்கின்றன என்பதை அறியாமல். இத்தகைய விபத்துகளிலிருந்து இன்னும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.விதிகளை பின்பற்றுவதன் மூலம் அதிகாரிகளுக்கு வேலைப்பளு பாதியாக குறைகிறது.`` என்கிறார் சரோஜா.

''இலையுதிர் காலத்தில் காட்டுப் பகுதியானது காய்ந்த சருகுகளால் நிரம்பி எளிதில் காட்டுத்தீக்கு வழிவகுக்கக் கூடுமென்ற இயற்கை சூழலைப் பற்றியும், பருவகாலம் பற்றியும் எவ்விதமான படிப்பினையும் இல்லாமல், பெரும்பாலான தன்னார்வ குழுக்கள் பாதுகாப்பு சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏதுமின்றி பயணியரிடையே ஈர்ப்பைத் தூண்டும் விதமான கட்டுரைகள், புகைப்படங்களை இணையத்தில் அலங்கரித்து காடுகளிலும், மலைகளிலும் அரசின் முன்னனுமதி ஏதுமில்லாமல் ஏற்பாடு செய்யும் பயணங்களால்தான் இத்தகைய விபத்துகள் அரங்கேறுகின்றன. விபத்துகள் மூலம்தான் அரசின் ஒவ்வொரு துறையும் நவீனப்படுத்தப்படும் என்ற அரசின் செயல்பாடுகளில் எழுதப்படாத விதியாக நடைமுறையில் இருப்பது மிகுந்த மனக் குமுறலை எழுப்புகிறது.'' என பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன்.

``பல நாட்களாக எரியும் வனபகுதியை காப்பாற்ற தவறிய அரசும் அதிகாரிகளும் தான் இந்த விபத்திற்கு முக்கியகாரணம்!!!`` என்கிறார் புலிவலம் பாஷா.

``மந்திரிகளுக்கு அவர்களின் பதவியை தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை அவர்களுக்கு நாடு எப்படி போனால் என்ன?`` என பதிவிட்டுள்ளார் நாசிர்.

``அதிகாரிகளின் கடமை தான் முக்கியம் மலை எற வருபவர்களுக்கு இதை பற்றி ஏதும் தெரியாது இதில் உள்ள அதிகாரிகள் தான் அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கி இருக்க வேண்டும் மலை ஏறும் முன்னே`` என்பது புவனா எனும் நேயரின் கருத்து.

``எந்த ஒரு சட்டதிட்டத்துக்கும் இரண்டு பக்கமும் ஒழுங்கு வேண்டும். அதிகாரிகளும் மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் கடமை பூர்த்தியாகும்`` என்கிறார் சுப்பு லட்சுமி.

``தமிழக மக்கள் பெரும் பகுதியினா் எந்த சட்டதிட்டத்தையும் மதிப்பதில்லை .தமிழக ஆட்சியாளா்கள் முதல் அதிகாரிகள் வரை சட்டமே என்ன என்று தெரியாது'' என்கிறார் வெங்கட்.

``சட்டம் சரியாக செயல்படவில்லை..!அதனால் தவறு செய்பவர்கள் பயப்படுவதில்லை....!`` என கருதுகிறார் மன்சூர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்