நோய் தொற்று பரவும் அபாயம்: பாதிக்கப்பட்டவரின் உறவினர் கோரிக்கை

நோய் தொற்று பரவும் அபாயம்: பாதிக்கப்பட்டவரின் உறவினர் கோரிக்கை

குரங்கணி காட்டுத் தீயில் காயம் அடைந்தவர்களை பார்க்க யாரும் வராதீர்கள் என்கிறார் தீ காயம் அடைந்த அனுவித்யாவின் சகோதரர் ஜனார்த்தனன்.

அனுவித்யா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பேசிய ஜனார்த்தனன், "யார் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. தொடந்து பலர் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இங்குள்ள யாரும் காட்சி பொருள் அல்ல. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது." என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :