குரங்கணி தீ விபத்தை தொடர்ந்து ஏற்காடு மலையேற்ற பயிற்சிக்கு தடை

  • 14 மார்ச் 2018
படத்தின் காப்புரிமை Getty Images

குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தின் எதிரொலியாக, கோடை காலம் முடியும் வரை ஏற்காட்டில் மலையேற்ற பயிற்சி தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாதளமான ஏற்காட்டில் தனியார் அமைப்புகள் சார்பில் அவ்வப்போது மலையேற்ற பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கோடை காலம் முடியும் வரை ஏற்காட்டில் மலையேற்ற பயிற்சிக்கு தடைவிதிக்கப்படுவதாக சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஏற்காடு, குண்டூர், ஆனைவாரி முட்டல், வழுக்குபாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில், மலையேறும் பயிற்சி கோடைகாலம் முழுவதும் தடைசெய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வனப்பகுதியில் தீப்பற்ற வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அவர், வனப்பகுதியில் 274 கிலோமீட்டர் தொலைவுக்கு 6 மீட்டர் அகலத்தில் தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்த 24 தற்காலிக தீத்தடுப்பு காவலர்களும், வனக்குழுவினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: