குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

  • 14 மார்ச் 2018
குரங்கணி

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(மார்ச்11) நடந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் மரணமடைந்துவிட்டதால், இறப்பு எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

மீட்கப்பட்ட சமயத்தில் 99சதவீத தீக்காயங்களுடன் இருந்த திவ்யாவுக்கு, மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதால், திவ்யாவின் உடல்நிலை மோசமடைந்து, அவர் இன்று மாலை( மார்ச் 14)இறந்துவிட்டார் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''தீவிர சிகிச்சை இருந்தாலும், தீக்காயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட சமயத்திலேயே பலத்த காயத்துடன் இருந்தனர். அவர்களுக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டது. ஆனால் மருத்துவ ரீதியாக 99 சதவீத தீக்காயம் மிகவும் ஆபத்தான மூன்றாம் நிலை தீக்காயம் என்பதால் இவர் மரணம் அடைந்துவிட்டார்,'' என வீரராகவராவ் தெரிவித்தார்.

இதற்கிடையில், குரங்கணி மலையில் நடந்த தீவிபத்து குறித்து விரிவான அறிக்கையை அளிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்