கோரக்பூர் தொகுதியை பாஜக இழந்தது ஏன்? ஐந்து முக்கிய காரணங்கள்

இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்விக்கு காரணம் என்ன? மூன்று முதல் மூன்றரை லட்சம் வாக்குகளை எப்படி இழந்தது? முக்கியமான ஐந்து காரணங்கள் இவை.

படத்தின் காப்புரிமை facebook adityanath

குஜராத் மற்றும் திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி அடைந்த வெற்றிக்கு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் புகழப்பட்டார். கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக அவர் செல்லவிருக்கிறார். இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது.

அந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற பின்னர், கோரக்பூர் மக்களவை உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் மற்றும் பூல்பூர் மக்களவை உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் பதவி விலகியதால் அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

கடந்த முப்பது ஆண்டுகளில் நாட்டிலோ அல்லது மாநிலத்திலோ நடைபெற்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைமை எப்படி இருந்தாலும், கோரக்பூரில் அசைக்க முடியாத வெற்றி பெற்றுவந்தது.

1989 முதல் 1996 வரை மஹந்த் அவையத்யநாத் எம்.பி.யாக பதவி வகித்தார். அதற்கு பிறகு 2017 வரை, அவரது சீடரான யோகி ஆதித்யநாத் மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். உத்தரப்பிரதேசத்தில் வாழவேண்டுமென்றால், அனைவரும் யோகி, யோகி என்று சொல்ல வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எக்காளமிட்டார்கள்.

படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA/AFP/Getty Images

இந்த நிலையில் தற்போதைய இந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்விக்கு காரணம் என்ன? இந்த இரண்டு தொகுதிகளில் பா.ஜ.க மூன்று முதல் மூன்றரை லட்சம் வாக்குகளை எப்படி இழந்தது?

இதற்கு பல காரணங்களை அடுக்க முடியும் என்றாலும், முக்கியமான ஐந்து காரணங்களை பட்டியலிடலாம்:

  • வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட தவறு
  • சாதி அடிப்படையிலான வாக்குகள்
  • கட்சியின் மீது தொண்டர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி
  • அரசின் செயல்பாடுகளால் மக்களின் சீற்றம்
  • மோதி மற்றும் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் தோல்விக்கான இந்த ஐந்து பிரதான காரணங்களை விரிவாக பார்க்கலாம்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

தவறான வேட்பாளர்

கோரக்பூரை சேர்ந்தவர் மட்டுமே அந்தத் தொகுதியில் வெற்றிப் பெற முடியும் என்று கட்சித் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோதி என கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு தெளிவாக கூறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் கட்சியின் தேசியத் தலைமை, உபேந்திர ஷுக்லாவை கோரக்பூரின் வேட்பாளராக களம் இறக்கியது.

கோரக்பூரை சுற்றியிருக்கும் பகுதிகளில் ஜகதம்பிகா பாலைத் தவிர கட்சியின் மற்ற எம்.பி.க்கள் அனைவரும் பிராமணர்கள். இந்த நிலையில் மற்றொரு பிராமணரை எதிர்த்து போட்டியிடுவது சாதிய சமன்பாடுகளின் அடிப்படையில் சரியான முடிவாக அமையவில்லை.

எது எப்படியிருந்தாலும், கோரக்பூரில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் பின்தங்கிய சாதிகளில் நிஷாத்தும் அடங்கும். இதனால்தான் சமாஜ்வாதி கட்சி இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் இதுவரை வெற்றி பெற்றதில்லை. ஆனால் இதே காரணம்தான் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பிரவின் குமார் நிஷாத் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றிபெறவும் உதவியது.

படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA/AFP/Getty Images

சாதி அடிப்படையிலான வாக்குகள்

சாதி அடிப்படையிலான வாக்குகள் குறித்த முக்கியத்துவத்தை முலாயம் சிங் நன்கு உணர்ந்துள்ளார். 1999ஆம் ஆண்டில், கோரக்பூர் தொகுதி வேட்பாளராக கோரகாக் நிஷாத் நியமிக்கப்பட்டார். ஒரு பொதுக் கூட்டத்தில், பெருமளவில் கூடியிருந்த யாதவர்களின் எண்ணிக்கையைப் பார்த்த அவர், யாதவ்களும், நிஷாத்களும் இங்கு இருந்தால் முஸ்லிம்கள் எங்கே போவார்கள்? என்ற கேள்வியை எழுப்பினார்.

இதேபோன்று பூல்பூர் தொகுதியில் மெளரியா தனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரினார். ஆனால் கோரிக்கையை நிராகரித்த கட்சி, உள்ளூரை சாராத கெளஷ்லேந்திர சிங் படேலை வேட்பாளராக்கியது. இது சமாஜ்வாதி கட்சியின் உள்ளூரை சேர்ந்த வேட்பாளருக்கு சாதகமாகிவிட்டது.

அலகாபாதின் மூன்று அமைச்சர்களான நந்தகுமார் குப்தா நந்தி, சித்தார்த்நாத் சிங், மௌரியா ஆகியோருக்கு இடையேயான உறவு இணக்கமானதாக இல்லை.

மௌரியா பூல்பூரில் 11 நாட்கள் தங்கியிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தாலும், அதன் பலனை அறுவடை செய்யமுடியவில்லை. அந்தத் தொகுதியில், தலித்துகள் மற்றும் பின்தங்கிய சாதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எழுபது சதவீதம் ஆகும்.

இரு தொகுதிகளிலும் போட்டியிடாத மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தெரிவித்த்து தேர்தலின் போக்கையே மாற்றி, இருதரப்பினரின் வாக்குகளையும் ஒன்றிணைத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு தோல்வியை தழுவ வைத்தது.

கோபமடைந்த மக்கள்

அதே நேரத்தில், மாநில அரசு செயல்பாட்டில் திருப்தியடையாத மக்கள் சீற்றத்தில் இருந்தனர். வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஓராண்டிற்குள் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு மாநில அரசு சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது.

முதியோர்களின் ஓய்வூதியமும், மாணவர்களின் கல்வி உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது விவசாயிகளுக்கும் மாநில அரச்சின் மீது அதிருப்தியில் இருந்தார்கள்.

தொண்டர்களின் அதிருப்தி

இதைத் தவிர, கட்சியின் தொண்டர்கள் தலைமையின் மீது அதிருப்தி மனநிலையில் இருந்தனர். தலைவர்கள் தொண்டர்களை சந்திக்கவில்லை. அவர்களுக்கு எந்தவிதமான ஆதாயமும் கிடைக்கவில்லை. அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, கட்சித் தலைவர்களின் போக்கும் மாறிவிட்டதாக தொண்டர்கள் கருதினார்கள்.

படத்தின் காப்புரிமை AKHILESH YADAV / TWITTER
Image caption உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் சமாஜ்வாதி கட்சியினர்

மேலும், கட்சியின் பொறுப்பாளர்கள் தொண்டர்களிடம் இருந்து விலகினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு கட்சிக்கும் தொண்டர்களே வலு சேர்க்கும் பலம் என்பது மறுக்கமுடியாதது. இதனால்தான் பாஜகவின் கட்சியின் தோல்வியை பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் கொண்டாடும்போது பாஜக தொண்டர்களும் அதை வரவேற்றார்கள்.

தேர்தல் பிரசாரத்திற்கு வராத அமித்ஷா, நரேந்திர மோதி

கட்சியின் முக்கியத் தலைவர்களான அமித்ஷா மற்றும் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை என்பதே பாஜக இந்த இடைத்தேர்தலுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

அனூப் குப்தா மற்றும் ஷிவ் நாராயண் சுக்லா போன்ற சாதாரணமானவர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் இருவரும் தங்கள் மாநிலத்தில் அமைச்சர் பொறுப்பு வகிப்பவர்கள். இது கட்சிக்குள்ளேயே பல விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. யோகி மற்றும் மௌரியாவின் மதிப்பை குறைக்க கட்சி விரும்புகிறதா என்ற கேள்வியும் எழுந்துவிட்டது.

படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA/AFP/Getty Images

குழப்பம் இல்லை

பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியால் பாஜக தோல்வியடைந்தது என்று கூறுவது சரியானதாக இருக்காது. கடந்த தேர்தலில் இரு கட்சிக்கும் கிடைத்த வாக்குகளை சேர்த்தாலும், பாஜக வேட்பாளரை தோற்கடித்திருக்க முடியாது.

2009இல் கோரக்பூரில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் மனோஜ் திவாரி (தற்போது டெல்லி பா.ஜ.க தலைவர்) 11 சதவிகித வாக்குகளை பெற்றார், பி.எஸ்.பியின் வினய் ஷங்கர் திவாரி 24.4 சதவிகித வாக்குகளை பெற்றார். இவர்கள் இருவரின் வாக்குகளையும் சேர்த்தாலும் பாஜக வேட்பாளர் தோல்வியடைய முடியாது. ஏனென்றால் அப்போது யோகி ஆதித்யநாத் கிட்டத்தட்ட 54 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.

2014ஆம் ஆண்டில் தேர்தலில் மோதி அலை வீசியபோதும், அதற்கு முந்தைய தேர்தலைவிட யோகி ஆதித்ய நாத்துக்கு இரண்டு சதவீத அளவிலான வாக்குகள் குறைவாகவே கிடைத்தது. ஆனால் சமாஜ்வாதி கட்சியின் 22 சதவிகிதம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் 17 சதவீத வாக்குகள் சேர்க்கப்பட்டாலும் அது யோகியை தோற்கடிக்கமுடியவில்லை. அதே நிலைதான் பூல்பூர் தேர்தலிலும் இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: