நாளிதழ்களில் இன்று: கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் நடத்திய விசாரணை முடித்து வைப்பு

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி

மதுரை சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், தமிழக அரசுக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்ததோடு, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கும் பரிந்துரை செய்தார். இந்நிலையில், கிரானைட் முறைகேடு விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் விசாரணையை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினத்தந்தி செய்தி கூறுகிறது.

தி இந்து (தமிழ்)

என்னைக் கட்சியை விட்டு நீக்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றிய முக்கிய ஆதாரங்களை நாளை வெளியிடுவேன் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி கூறியுள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கருத்து தெரிவித்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இவர் அதிமுகவில் எம்.பி., எம்எல்ஏ என பதவி வகித்தவர் என தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

படத்தின் காப்புரிமை NASA

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்று வழியில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

அண்மையில் கட்சியின் பெயரையும் கொடியை அறிமுகம் செய்த ஆர்.கே நகர் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக தமிழக முதலமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார். தினகரின் கட்சிக் கொடியின் வண்ணமும், அதில் உள்ள அம்சங்களும் அதிமுக கொடியை ஒத்ததாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தினகரன் தனது கட்சிக் கொடியில் மாறுதல் செய்தாலும், அதில் சிவப்பு, வெண்மை மற்றும் கருப்பு நிற வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்