இலங்கை: "வன்முறையை வளர்ப்பது மதங்கள் அல்ல, மனிதர்கள்தான்"

இலங்கை

இலங்கை வன்முறையால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெளத்த- முஸ்லிம் மக்களிடையே இன மோதல் அதிகரித்துள்ளதா? அல்லது வன்முறையை தடுக்கவும், ஒற்றுமை நிலவவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று 'வாதம் விவாதம்' பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.

"இனமோதல் குறைந்துள்ளது. ஆனால் மீண்டும் வராது என்பதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இனமோதல்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் இதெல்லாம் கண்துடைப்பு போல நடக்கிறது" என்று பிபிசி ஃபேஸ்புக் நேயர் அப்துல் மொஹமத் கூறியுள்ளார்.

பௌத்த- முஸ்லிம் மக்களிடையே தூண்டிவிடப்பட்ட பிரச்சனை இது என்கிறார் பிபிசி நேயர் வெற்றி. வன்முறையாக மாறிவிட்ட இப்பிரச்சனைக்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று தாம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

"இது இன்று நேற்று நடக்கும் விடயம் அல்ல. இலங்கையில் பௌத்த-முஸ்லிம் கலவரம் 1915ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்கிற பௌத்த பேரினவாத மனோபாங்கு உள்ளவரை சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர் கதையாகவே இருக்கும். இந்தியா போன்று இங்கும் அதிகாரப்பரவலாக்கம் தேவை" என்று ட்விட்டர் நேயர் தெரிவித்துள்ளார்.

"அரச இயந்திரம் இனவாதிகள் நிறைந்தது. குற்றவாளிகளுக்கு சரியான தண்டணை கொடுத்தால் எல்லாம் மாறும், அது நடக்குமா என்பது சந்தேகம். ஏனெனில் முக்கிய கட்சிகள் பெரும்பான்மை மக்களின் வாக்கு குறையும் என்று கணக்குப் பார்க்கிறார்கள்" என்று ஷராஃதீன் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்