நாளிதழ்களில் இன்று: குரங்கணி தீ விபத்து: "அங்கீகரிக்கப்படாத வழியில் சென்றதால் விபத்தில் சிக்கியுள்ளனர்''

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்

படத்தின் காப்புரிமை Getty Images

குரங்கணி காட்டுத் தீயில் 17 பேர் இறந்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,'' குரங்கிணி வனப் பகுதியில் ’லெமன் கிராஸ்’ என்ற கக்குநாரி புற்கள் அதிகம் இருந்ததால், தீ வேகமாக பரவியுள்ளது. மலையேற்றத்திற்குச் சென்றவர்கள், அங்கீகரிக்கப்படாத காப்புக் காடு வழியாக சென்றதால் விபத்தில் சிக்கியுள்ளனர்'' என்றார் என தினமலர் செய்தி கூறுகிறது

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினருக்குத் தனி மத அந்தஸ்து வழங்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்ப, சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ஓட்டு வங்கி அரசியலுக்காக சித்தராமையா நெருப்புடன் விளையாடுகிறார் என பா.ஜ.கவின் பொது செயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, கொல்கத்தாவில் சந்தித்து பேசிய தெலங்கானா முதலவர் சந்திரசேகர் ராவ், தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டாட்சி முன்னணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார் எனவும், பாஜக மீது அதிருப்தியில் உள்ள சிவசேனா, தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட கட்சிகளை இக்கூட்டணியில் சேர்க்க அடுத்த கட்டமாக முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிகிறது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் "ராம ராஜ்ய ரதயாத்திரை" நடப்பதை ஒட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் 19-ம் தேதி மாலை 6 மணி முதல், மார்ச் 23-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள், இந்த யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது என கோரியிருந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்