வாதம் விவாதம்: வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு சரியா?

  • 22 மார்ச் 2018

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் அரசு ஊழியரை கைது செய்ய அரசின் அனுமதி தேவை: உச்சநீதிமன்றம்.

இதனை அடிப்படையாக வைத்து பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு சரியா? இந்த உத்தரவால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் பாதிக்கப்படுமா? என்று கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.

"தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. குடும்ப வன்முறைகளிலும், வரதட்சனை குற்றசாட்டுகளிலும், போலி பாலியல் குற்றசாட்டுகளிலும் , பலர் அரசு வேலையை இழந்து உள்ளனர். எனவே அவர் துறை சாரந்த மேலதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடத்த வேண்டும்.அவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் கைது நடவடிக்கையை எடுக்கலாம். இறுதி தீர்ப்பு வரும் வரை அரசு வேலையை விட்டு நீக்க கூடாது." என்பது துரை முத்துசெல்வத்தின் கருத்து.

சரோஜா பாலசுப்பிரமணீயன், "இந்தக் காலத்தில் பழி வாங்கும் நோக்கில் இந்த சட்டத்தை பயன் படுத்த வாய்ப்புள்ளது.வரதட்சணை கொடுமை சட்டத்தை போலவே, இந்த சட்டத்தையும், ஒரு கூர் கத்தியை கையாள்வதை போலவே கையாள வேண்டும். இல்லையென்றால் தவறு நடக்க வாய்ப்புள்ளது." என்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்