நாளிதழ்களில் இன்று: தமிழக கோயில்கள் வெளியே உள்ள கடைகளை அகற்ற உத்தரவு

  • 23 மார்ச் 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர் - கோயில்களில் வணிக நோக்கில் செயல்படும் கடைகளை அகற்ற உத்தரவு

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் கோயில்களில் வணிக நோக்கில் செயல்படும் கடைகளை அகற்ற அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கோயில்களில் உள்ள குளங்கள், மண்டபங்கள் மற்றும் பிரகாரங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல கோவில்களில் விபத்து ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றும்படி அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நோட்டீசை எதிர்த்து ஏழு பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதனை தள்ளுபடி செய்து, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அச்செய்தி விவரிக்கிறது.

தினமலரில் வெளியான கார்ட்டூன்

படத்தின் காப்புரிமை DINAMALAR

தினமணி - 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் சிறை

18 வயதுக்குட்பட்டவர்கள் பொது இடத்தில் வாகனம் ஓட்டினால் மூன்று மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 180ன் படி ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர் அல்லது 18 வயதுக்கு குறைவான நபர் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறார்களிடம் தங்களது வாகனத்தை வழங்கும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து - சென்னை எக்மோர் - விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை எக்மோரில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை தொடங்கும் பட்சத்தில் நாளின் முக்கிய நேரங்களில் ஐந்து நிமடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அச்செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்