வாதம் விவாதம்: “ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டம், மக்களுக்கு திண்டாட்டம் மட்டுமே”

எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை கொண்டாட்டம் தொடர்பாக, சாதனைகளை கொண்டாடும் அளவுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டதா? மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இன்னொரு முயற்சியாகத்தான் பார்க்க வேண்டுமா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இது தொடர்பாக, பிபிசி நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை உங்களுக்கு இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

முரளி தேவி என்ற நேயர், "அப்படி பெரிதாக எதுவுமே இல்லை. பதவியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தை தவிர" என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.

மக்கள் பணம் தான் விரயம் என்று முகமது அஸாருதீன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

முத்து செல்வம் என்கிற நேயர், "வருவாயை பெருக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வரி வருவாயில் அரசு இயந்திரத்தை இயக்கி வருகின்றனர்" என்கிறார்.

நிஸார் அகமது, "மக்களின் வரிப்பணம் வீணாக்க அடுத்த கொண்டாட்டமாகத்தான் இருக்கப்போகிறது, சாதனையுன்னு என்ன சொல்ல???" என்று கூறியுள்ளார்.

"வேதனை.. மக்களுக்கு ஏற்பட்ட சோதனை. சாதனை அல்ல" என்பதுதான் அன்பு ராஜ் ட்விட்டரில் தெரிவித்த கருத்து.

மீரான் சிராஜூதீன் என்பவர், "மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய வழிவகைகளை ஏற்படுத்தாமல், தன் பெருமைக்காக சுயநலத்திற்காக நடத்தப்படும் ஓராண்டு சாதனை விழா... இது வேதனையான ஒன்று" என்கிறார்.

கவி என்கிற நேயர், தொழில் மற்றும் வளர்ச்சியில் அதிக அளவு முன்னேறி வருகிறது தமிழக அரசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

பாஷா என்கிற நேயர், "ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டம் மக்களுக்கு திண்டாட்டம் மட்டுமே!!" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஓராண்டு தாக்குப்பிடித்ததுதான் சாதனை, மற்றதெல்லாம் வேதனை என்று சின்னதம்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராஜவேல் ராஜா, இது சாதனையான ஆண்டு இல்லை. வேதனையான ஆண்டு என்று கூறியுள்ளார்.

சீனி.சுப்பிரமணியன் என்பவரோ, "காகிதத்தில் தேன் என்று எழுதியிருக்கிறார்கள். எழுத்துக்கள் மட்டும் இனிப்பதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

தங்கபிள்ளை என்ற நேயர், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இன்னொரு முயற்சிதான் இது என்கிறார்.

"மக்களின் வயிற்று எரிச்சலை மேலும் மேலும் கொட்டி கொள்கின்றார்கள்" என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்