"மக்களின் உயிரை வதைக்கும் தொழில் வளர்ச்சி யாருக்காக?"

படத்தின் காப்புரிமை TWITTER/TN YOUNGSTERS TEAM

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை எதிர்த்து 50 ஆயிரம் மக்கள் திரண்டனர். ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, சூழலியலை கெடுக்கும் என்ற மக்களின் வாதம் ஏற்புடையதா? தொழில் வளர்ச்சியை மக்கள் எதிர்க்கிறார்களா? என்று பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

"சூழ்நிலையை கெடுக்கிறது என்னும் குற்றசாட்டு உண்மைதான். தொழிற்சாலையை ஆரம்பித்திலேயே விதிமுறைபடி அமைக்கவில்லை. போராட்டகாரர்கள் பக்கம்தான் நியாயம் உள்ளது. ஆக்கபூர்வமான தொழில்வளர்ச்சியை யாரும் எதிர்க்க மாட்டார்கள். வளத்தை பெருக்கி வரும் வளர்ச்சிதான் ஆக்கபூர்வமானது, வளத்தை அழித்து வருவது நிராகரிக்கவேண்டியது. மத்திய மாநில அரசுகள் அழிவுக்கு வித்திடுபவைகளைதான் தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றன" என்று ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார் துரை முத்துச்செல்வன்.

"மக்களின் உயிரை வதைத்து தொழில் வளர்ச்சி வேண்டுமானால் அந்தவளர்ச்சி யாருக்காக? மக்களுக்கு, விவசாயத்திற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி" என்று பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன் என்ற நேயர்.

"இந்த தொழில் நிறுவனம் தூத்துக்குடி நகருக்கு வரும் காற்றின் திசையில் அமைந்து இருப்பதால் மக்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும் so2 அளவு 12ppm அளவுக்கு இருகின்றது. ஆனால், அரசு சொல்லும் அளவு என்பது 3.5 ppm தான். குறிப்பாக நகரின் மைய பகுதியில் இதன் அளவு கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டு இருக்கிறது" என்று கூறியுள்ளார் அலெக்ஸ்.

"தொழில் வளர்ச்சிக்காக மனித உயிர்கள் அழிவுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வியெழுப்பியுள்ளார் அருள் நாதன் என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.

"தொழில் வளர்ச்சி என்பது வேறு. தொழிற்சாலை வளர்ச்சி என்பது வேறு. மக்கள் இங்கே எதிர்ப்பது தொழிற்சாலை வளர்ச்சியைதான்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் சுரேஷ் மணிரத்னம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: