காலக்கெடு முடிவதற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா?

  • 27 மார்ச் 2018

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் அறிவித்தது.

படத்தின் காப்புரிமை STR

இந்த காலக்கெடு மார்ச் 29ம் தேதியோடு முடியும் நிலையில், இந்த வாரியத்தை அமைப்பதிலுள்ள சிக்கல் என்ன என்பது பற்றி உச்ச நீதிமன்ற செய்தியாளர் வெங்கடேசன் பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

உச்ச நீதிமன்ற வழக்கு

காவிரி பிரச்சனை பற்றி 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லுமா, செல்லாதா?

அந்த தீர்ப்பு செல்லாவிட்டால் நதிநீர் பங்கீட்டை எவ்வாறு செய்வது என்பதுதான் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு.

படத்தின் காப்புரிமை STRDEL

தீர்ப்பின் சாரம்சம்

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய அறிவிப்பு ஒட்டு மொத்தமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஒரேயொரு சிறிய மாறுதலை மட்டும் உச்ச நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது. பொங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக 4. 14 டிஎம்சி நீரையும், கர்நாடகா பாசன பகுதிகளை அதிகரித்து கொள்வதற்காக 10 டிஎம்சியையும் அதிகமாக கொடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தமிழ் நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தெரிவித்திருந்த அளவில் இருந்து இந்த 14.14 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்படுகிறது.

வேறு எந்த வித்திலும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மாற்றவில்லை என்று இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு அதிகாரம்?

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வந்த பிறகு, இந்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்குதான் அதிகாரம் இருக்கிறது.

மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிச்சனை சட்டத்தின்படி, 6ஏ பிரிவின்படி, நாங்கள்தான் ஒரு திட்டம் தயாரித்து, அதனை நாங்களே அமல்படுத்த வேண்டும், எங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்ற கோரிக்கையை மத்திய அரசு விடுத்திருந்தது.

இந்த வாதத்தை முற்றிலும் நிராகரிக்கின்றோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

காவிரி மோலாண்மை வாரியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதில் எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும், அதனுடைய பங்கு என்ன? அதனுடைய வரையறைகள் என்ன? ஒரு வருடத்தில் மழை இல்லை என்றால், இருக்கின்ற தண்ணீரை எவ்வாறு பங்கிட வேண்டும் என்ற அம்சங்களை எல்லாம் காவிரி நடுவர் மன்றம் அதனுடைய தீர்ப்பில் தெரிவித்திருப்பதை இதற்கு காரணமாக கூறியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய அரசின் 6எ திட்டம் என்று சொல்லுகிறபோது, காவிரி மோலாண்மை வாரியம் என்று அடைப்புக்குறிக்கள் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முடிவில் "டரைக்சன்ஸ்" எனப்படும் செயல்படுத்துவதற்கான பகுதியில் இந்த 6எ திட்டத்தை மத்திய அரசு 6 வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ் நாட்டின் கருத்து

காவிரி நடுவர் மன்றத்தின் கருத்தை ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டுள்ளபடியால், காவிரி மோலாண்மை வாரியத்தை தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளபடியால், 6எ திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்று தமிழ்நாடு தெரிவிக்கிறது. இதற்கு இருவிதமாக அர்த்தங்கள் இல்லை என்பது தமிழ்நாட்டின் வாதமாக உள்ளது.

கர்நாடக தரப்பு வாதம்

6எ திட்டம் என்பது மத்திய அரசுக்கு நாங்களே ஒரு திட்டத்தை தயாரித்து வழங்கலாம். இந்த திட்டத்தில் காவிரி மோலண்மை வாரியத்தையும் கருத்தில் கொண்டு தாயரிப்போம். இதனை காவிரி மோலாண்மை வாரியம்தான் இந்த திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்கிற வாதம் தவறானது என்பது கர்நாடக மாநிலத்தின் வாதமாக உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிர்ப்பு ஏன்?

ஓரளவு கர்நாடகத்தின் வாதத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதுபோலத்தான் இப்போது நிலைமை உள்ளது.

மோலண்மை வாரியம் என்பது வந்துவிட்டால் கர்நாடகாவிலுள்ள 4 நீர்தேக்கங்களும் மோலண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் போய்விடும்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்திற்கு வரக்கூடிய மதாந்தர தண்ணீர் அளவு சரியாக வரவில்லை என்றால், பிலிகுண்டில் இருந்து இந்த மோலண்மை வாரியம் தமிழ்நாட்டுக்கு சரியான அளவு தண்ணீரை நேரடியாக திறந்து விட்டுவிடும்.

மாதம்தோறும் திறந்து விட வேண்டிய அளவை சரியாக வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற வகுத்துள்ள திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்று தமிழ்நாடு கூறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் என்று வந்துவிட்டால் மாநில அரசின் கட்டுப்பாடு மத்திய அரசிடம் சென்றுவிடும் என்பதால் காநாடகா இதனை எதிர்க்கிறது.

இருவகையான திட்டங்கள்

முன்னதாக, பக்ராநங்கல் நதி வாரியம், நர்மதா நதி நிர்வாகம் என நதி நீரை பங்கிடுவதில் இரண்டு முறைகள் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளன.

இதில், பக்ராநங்கல் நதி வாரியத்தில் மத்திய அரசிடம் முழு அதிகாரம் உள்ளது.

நர்மதா நதி வாரியத்தை எடுத்துக்கொண்டால், மத்திய அரசுக்கு முழு கட்டுப்பாடு இல்லை. முறைப்படுத்துவதை மட்டுமே மத்திய அரசு கண்காணிக்கிறது.

நர்மதா நதிநீர் வாரியத்தைபோல, இதனை அமைத்தால் போதும் என்று என்று கர்நாடகா மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த பாணியில்தான் தண்ணீர் மூலவள அமைச்சகம், அமைச்சரவை குறிப்பு ஒன்று தயாரித்துள்ளது என்று செய்தி வந்துள்ளது.

இந்த அமைச்சரவை குறிப்பு சரியாக உள்ளது என்பதை இந்திய சட்ட அமைச்சம் உறுதி செய்துவிட்டால், நேரடியாக அமைச்சரவை போய்விடும்.

அமைச்சரவை அந்த குறிப்பை ஏற்றுக்கொள்ளுமானால், அதற்கு பின் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நிர்வாகம், காவிரி ஒழுங்காற்று நிர்வாகம், அல்லது என்ன பெயர் அதற்கு கெடுக்கிறார்களோ அது முக்கியமல்ல, அதில் யார் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், அதன் கட்டுபாடு யாரிடம் உள்ளது என்பதுதான் முக்கியமாக இருக்கும். என்று எண்ணுவதாக வெங்கடேசன் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

தமிழ் நாடு பாதிக்கப்படுமா?

மத்திய அரசின் முழு கட்டுப்பாடு என்ற விதமாக பக்ராநங்கல் நதி வரியம், முறைப்படுத்துகிற அதிகாரம் மட்டுமே என்று நர்மதா நதி நிர்வாகம் என இரண்டு முறைகள் ஏற்கெனவே உள்ளதைபோல, காவிரி மேற்பார்வை வாரியம் என கொண்டு வந்து முறைப்படுத்தலை மட்டுமே மத்திய அரசிடம் கொடுக்கும் திட்டத்துக்குதான் கர்நாடகம் ஆதரவு அளித்து வருகிறது.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்கு வழங்குவதற்கு தெரிவித்திருக்கும் நீரின் அளவை மாற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்ற கூறியுள்ளது.

மத்திய அரசிடம் முழு கட்டுப்பாடு இருந்தால், இந்த விடயத்தில் மாநிலம் எதையும் செய்ய முடியாமல் போகும்.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் என்று வந்தால், மழை இல்லாத நேரத்தில் தண்ணீர் போதிய அளவு இல்லை. எனவே, எதிர்பார்க்கின்ற தண்ணீரை தர முடியாது என்று கர்நாடகம் கூறக்கூடிய நிலைமை ஏற்படலாம் என்று வெங்கடேசன் தெரிவித்தார்.

கர்நாடக தேர்தல் எதிரொலிக்குமா?

கர்நாடக தேர்தல் வருவதால், தேர்தல் தேதி அறிவித்த பிறகு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது தள்ளிப்போகலாம் என்ற அச்சம் தமிழ் நாட்டுக்கு இருந்ததால், இதனை தெளிவுப்படுத்த தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு முறையிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தியுள்ளது.

எனவே, உடனடியாக இந்த வாரியத்தை அமைப்பதில் சிக்கல் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

ஆனால், எப்படிப்பட்ட வாரியம் அமைக்கப்பட்டாலும், கர்நாடகத் தேர்தலில் இது எதிரொலிக்கும் என்று வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.

காவிரி தீர்ப்பு: விவசாயிகள் மனநிலை என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காவிரி தீர்ப்பு: விவசாயிகள் மனநிலை என்ன?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: