குற்றப் பின்னணி இல்லாத அரசியல் சாத்தியமில்லையா?

  • 28 மார்ச் 2018

குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், அரசியல் கட்சியின் தலைவராக செயல்படுவது ஜனநாயகத்தின் தூய்மையை பாதித்து விடும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தை, "அரசியல் கட்சிகள் நடைமுறைப்படுத்த வேண்டுமா?

அல்லது இது நடைமுறையில் சாத்தியம் இல்லையா?" என்று #வாதம்விவாதம் பகுதியில் பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

அதற்கு அவர்கள் பதிவிட்ட கருத்துக்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

"குற்றப்பின்னணி இல்லாத அரசியல்வாதிகளே இல்லை, குற்றவாளிகளாய் இருப்பதுமட்டும் தான் நாட்டை ஆள்வதற்கு அடிப்படை தகுதி என்று ஆகிவிட்ட நாடு. சிறையில் இருக்கும் குற்றவாளி நடத்தும் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுக்கிறது. ஏகப்பட்ட மோசடி வழக்குகள், கிரிமினல் வழக்குகள் இருக்கும் ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறது," என்று கூறுகிறார் மனோகர் எனும் பிபிசி தமிழ் நேயர்.

"வரவேற்கதக்க கருத்து, மேலும் அரசியல் அறிவியல் படித்தாக வேண்டும், சமூக சேவையில் ஈடுபட்டிருக்கவேன்டும் போன்ற வரையறைகளை விதித்தால் சிறந்த ஜனநாயகம் உருவாகும்," என்கிறார் அப்துல் கலாம் ஆசாத் எனும் நேயர்.

"குன்காவின் திர்ப்பை குமாரசாமி மாற்றி எழுதிய போது ஜனநாயகத்தின் தூய்மை பாதிக்கபடவில்லையா?" என்று கேள்வு எழுப்பும் சிக்கந்தர் என்னும் நேயர், "சட்டமும் தண்டணையும் சாமனிய மக்களுக்கு மட்டுமே," என்று கூறுகிறார்.

"உறுதியாக நடைமுறை படுத்த வேண்டும், குற்றவாளி என்று தீர்ப்பளித்த பிறகு அவர் தொடர்ந்து கட்சியின் தலைவராக நீடித்தால் அக்கட்சி நிர்வாகி முதல் தொண்டர்கள் வரை எப்படி நேர்மையானவராக இருக்க முடியும். இங்கு ஊழலும் சட்ட விரோதமான காரியங்களும் தான் நடக்கும்," என்கிறார் பாலன் சக்தி எனும் பிபிசி தமிழ் நேயர்.

"அரசியல் தலைவர்கள், நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்றனர், அன்று, நாட்டின் ஊழல் குற்றத்திற்காக சிறை செல்கின்றனர், இன்று. குற்ற வழக்கில் தண்டனை பெற்றவரது நிழற்படத்தை அரசு அலுவலகம், விழா மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விளக்க விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவதை முதலில் உச்சநீதிமன்றம் வரைமுறை படுத்த வேண்டும்," என்று பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன்.

"உச்ச நீதி மன்றத்தின் கருத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால், ஒன்றிரண்டு கம்யூனிஸ்ட் தலைவர்கள் தவிர யாரும் அரசியல் கட்சி தலைவராக இருக்க முடியாது," என்பது சரோஜா பாலசுப்பிரமணியன் எனும் நேயரின் கருத்து.

"அப்படி என்றால் இந்தியாவில் எந்த கட்சியும் இருக்காது. ஊழல் படியாத அரசியல் கட்சிகளே இந்தியாவில் கிடையாது," என்று பிரபு எனும் நேயர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: