உயரும் சுங்கக் கட்டணம்: சாலைகளின் தரமும் உயர்கிறதா?

  • 29 மார்ச் 2018

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

'சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு சரியானதா? நாட்டின் கட்டுமான வளர்ச்சிக்கு இது தேவையானதா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"வாகனம் வாங்கும் பொழுது வசூலிக்கும் சாலை வரி எதற்கு சந்திர மண்டலத்தில் சாலை போடவா?" என்று கேள்வி எழுப்புகிறார் சுல்தான் சலாஹுதீன்.

"முன்பு ஒரு காலத்தில் வழிபறி கொள்ளையர்கள் என்ற கொள்ளையர்கள் இருந்ததாக பழைய படங்களில் வரும். அதுவே பின்னாளில் அரசு அத்துறையை கையக படுத்தி காலத்தின் வளர்ச்சியில் நவீன படுத்திய துறையே சுங்க துறை," என்று எள்ளலாக பதிவிட்டுள்ளார் சுரேஷ் எனும் நேயர்.

சுங்கக் கட்டணம் அரசுக்குப் போவதில்லை. ஏலத்தில் எடுத்துள்ளவர்களுக்கே போகிறது என்கிறார் தீபக் மோகன் எனும் நேயர்.

இதை 'வகைப்படுத்தப்பட்ட கொள்ளை' என்று வர்ணிக்கிறார் செந்தில் குமார் எனும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :