காவிரி மேலாண்மை வாரியம்: 'கடைசி நாளில் மத்திய அரசுக்கு வந்த சந்தேகம்'

படத்தின் காப்புரிமை STRDEL

காவிரி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்பதன் பொருள் குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

எனவே 'அரசியல் காரணங்களுக்காக காலதாமதம் செய்கிறதா மத்திய அரசு? சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். நேயர்கள் பதிவிட்ட கருத்துகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

"உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் 2014ஆம் ஆண்டில் விவசாய மானியங்களை கட்டுப் படுத்துகிறோம் என்று கையெழுத்து போட்டவர் நிர்மலா சீதாராமன்! அதைத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் மீது தொடுக்கப் படும் தாக்குதல்களை சிறிது பின்னோக்கி பார்த்தால், யார் குற்றவாளி என்பது புரியும்," என்கிறார் பிறை கண்ணன் எனும் பிபிசி தமிழ் நேயர்.

மத்திய அரசு கர்நாடக மாநில தேர்தல் முடிவுக்காக காலம் தாழ்த்துகிறது என்கிறார் சசி குமார்.

"கர்நாடகா அரியணை ஆசையே காரணம். ஆறு வாரமாக வராத சந்தேகம் கடைசி நாளில் மட்டும் வருகிறதா? அனைத்தும் ஏமாற்றுவேலை. இத்தனை நாளாக மத்திய அரசு தூங்கிக்கொண்டு இருந்ததா?" என்று கேள்வி எழுப்புகிறார் அதிதி எனும் ட்விட்டர் பதிவாளர்.

"100%அரசியலைத்தான் மத்திய அரசு செய்கிறது.சென்ற முறை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட்டதைக் கண்டு கொள்ளாமல் இருந்து இப்போது மட்டும் அரசு சட்டரீதியாக செயல்படும் என்று எண்ணுவது ஏமாளித்தனம்," என்கிறார் சீனி.சுப்பிரமணியன் எனும் நேயர்.

"முறையான சட்டநடவடிக்கையை மத்திய அரசு எடுப்பதாக இருந்தால் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது உச்சநீதிமன்றத்திற்கு கிடையாது என்று சொல்லியிருக்கமாட்டார்கள்," என்கிறார் துரை முத்துச்செல்வம் எனும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்